பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கவிஞர் கு. சா கி.

ஆனால் கோபால கிருஷ்ண பாரதியார் உருவாக்கிக் காட்டும் நந்தனாாேர இன்றைய கொத்தடிமைப் பண்ணை யாட்கள் அனுபவிக்கும் கொடுமைகளையெல்லாம் படம் பிடித்துக் காட்டும் பாத்திரமாகவும், வேதியர் நிலப் பிரபுத் துவத்தின் இரக்கமற்ற இரும்பு நெஞ்சத்தின் கொடுமையைக் காட்டும் பாத்திரமாகவும் எடுத்துக் காட்டப் படுகின்றார்.

ஆம்; காரல்மார்க்ஸின் தத்துவத்தையும், இன்றைய சோவியத் நாட்டின் வர்க்கப் புரட்சியையும், அன்றே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் கோபாலகிருஷ்ண பாரதியார்.

அதுமட்டுமல்ல, பார்ப்பான் என்ற உயர்வு மனப்பான் மையையும், பறையன் என்ற இழிவு மனப்பான்மையையும், பக்தி என்ற துலாக்கோலில் எடைபோட்டு, மலையை மடுவாக வும், மடுவை மலையாகவும் அடித்துத் தகர்த்து வீழ்த்தியும் உயர்த்தியும் காட்டியுள்ள அவரது துணிவு எண்ணி எண்ணி மகிழத்தக்கதாகும்.

அவருக்கு பின்னே வந்த அமரகவி பாரதி,

'நந்தனைப் போலொரு பார்ப்பான்-தனையிந்த

நாகில மீதினில் நான்கண்ட தில்லை!' என்று இவருக்குச் சாற்றுக்கவி வழங்கிப் போற்றியுள்ளார். இன்றைய சீர்திருத்தவாதிகள் நந்தனார் கதையில் கையாண் டிருக்கும் அமானுஷ்ய சித்தாந்தத்தையும், புராணக் கற்பனை களையும் கிண்டல் செய்யலாம்! ஆனால், அது அர்த்தமற்ற செயலாகும்.

அவரது காலம் அவர் மேற்கொண்டிருந்த துறை ஆகி யவை பற்றியும் சிந்திக்க வேண்டும். பக்தர்கள் மத்தியில் கதாகாலகூேடியம் செய்து பக்தியை வளர்ப்பது அவர் தொழில் அந்த நிலையிலும், அவருக்குச் சரியென்று தோன்றிய சீர்திருத்தக் கருத்தென்னும் கசப்பு மருந்தைப் பக்தியென்னும் வெல்லத்திற்குள் வைத்து வழங்கிய திறத்தை, பண்ணையாள்