பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

கவிஞர் கு. சா. கி. என்னிடமும் அணிந்துரை ஏன் கேட்டார் என்றுதான் தெரியவில்லை! ஒருவேளை தியாகத்தின் வழித் தோன்றலின் கருத்து அறியத் தேர்வு வைத்தாரோ என்று ஐயுறுகிறேன்.

எப்படியிருப்பினும், விடுதலைக்கு வித்திட்டவர்கள் இந்த ஆராய்ச்சி - அனுபவ நூலை விரைந்து படித்து முடித்தபின்பு, இது தமிழகத்தின் விடுதலைப் போரில் நாடகக் கலைஞர்களின் சீரிய பங்கினைச் சிறப்போடு இயம்பும் வரலாற்று ஏடு என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. தமிழகக் கூத்துக் கலைஞர்களின் தேச பக்திஅவர்களது நாட்டுப் பணி பற்றி ஓர் விரிவான நூல் எழுத ஆசிரியர் கு.சா. கி. அவர்களை விட்டால் இன்று நம்மிடையே யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக் குறிதான் என்னுள் எழுகின்றது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேல் நாடுகளாயிருந் தால் இந்த அரிய படைப்புக்கு புலிட்ஸர்' பரிசு போன்ற சிறப்பு கிடைத்திருக்கும் என்பது உறுதி இப்போதும் காலம் தாழ்ந்து விடவில்லை; நூலின் விரிவாக்கப் புதிய பதிப்பு வெளியான பின்பு, தமிழ் வளர்ப்பதற்கென உள்ள அரசுத்துறை நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் கண் திறந்து, உரிய முறையில் நூல் ஆசிரியருக்குச் சிறப்புச் செய்யலாமே!

புதிய பதிப்பில் குறிப்பிடத்தக்க தனிச் சிறப்பு : நூலாசிரி யர் பலப் பல புகழ்பெற்ற நாடகக் கலைஞர்களின் திருவுருவப் படங்களைத் தேடியெடுத்துத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இது போற்றற்குரியது.

இறுதியாக ஒரு சொல் : தமிழ்நாடகக் கலையின் இன்றைய நிலைபற்றி நடிகரும், கவிஞரும், நாடகாசிரியரு மான கு. சா. கி. வேதனைப்படுவதை எதிரொலிப்பதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும் என்ற ஏக்கம் ஏற்படு கின்றது . -