பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 149

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே'... என்ற அருட்பாடலும், இன்னும் என் காது களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

திரு. கன்னையா அவர்கள் அப்பழுக்கற்ற வைஷ்ணவப் பக்தராகத் திகழ்ந்தார். நாடகத்தின் மூலம் திரட்டிய பல லட்ச ரூபாய்களை ரீவில்லிபுத்துர், பூரீரங்கம், திருக்கண்ண புரம், பரீபெரும்புதூர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருப்பதி முதலிய தேவாலயங்களிலுள்ள விக்ரகங் களுக்குத் தங்கக் கவசங்களாகவும், வெள்ளி வாகனங்களாக வும், தங்க நகைகளாகவும், வைரத்தோடாகவும் வாரி வாரி வழங்கி, அதில் இன்பங் கண்ட திரு. கன்னையா அவர்களுக்கு இணை கன்னையாவேயாகும்.

விடுதலை இயக்கத்தில் கூத்துக் கலைஞர்கள்

இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்திலேயே இந்தியநாட்டின் அரசியல், கலை,இலக்கியம்ஆகிய அனைத் துத் துறைகளிலும் ஒரு புதிய எழுச்சியும் மறுமலர்ச்சியும் எங்கும் பரவலாக எதிரொலிக்கத் தொடங்கின. இதன் சாயல் நாடகக் கூத்துக் கலைகளிலும் பிரதிபலிக்கத் தவற வில்லை.

வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து முதன் முழக்கம் செய்து, வீரப்போர் நடத்தித் தூக்குமேடையேறிய வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றைக் கட்ட பொம்மன் கதையென்ற பெயரால் திருநெல்வேலி, இராம னாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பட்டி தொட்டிகளெல்லாம், ஊர்பேர் தெரியாத நூற்றுக்கணக் கான தெருக்கூத்துக் கலைஞர்கள், திறந்த வெளிகளிலே நாடகம்போட்டு சுதந்திரக் கனலை அணையாது காத்து வந்தனர். அதில் அவர்கள் பாடிய பாடல்கள் மிக எளிய கிராமியப் பாணியிலேதான் இருந்தன. ஆனால், அந்தப் பாடல்களிலே உள்ள உணர்ச்சியும், உயிர்த்துடிப்பும்