பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 127

கேயமுடனே இருபதாம் வயதினிலே நேர்ந்ததிருநாமம் ஓங்க கிருதர்வளர் சீமையிலே படித்துச் சட்டமுறை நீதிவாய்ந்த துரயகுண தாதாபாய் பார்லி மென்டில் இடம் பெறவே

துணையாய் கின்றார்-மற்றும் இந்து முஸ்லீம் சோதரரை இகழ்ந்த ஜான்மக்லீனை

எதிர்த்து வென்றார் தேசமெல்லாம் கொண்டாடும் அரவிந்தர் வழக்கிலும்

வாதாடி வென்றார் மற்றும் பல தேசபக்தர் வழக்குகளில் தர்ம வக்கீலாய்

கின்று உழைத்தார்-(இந்து)

(தொகையறா)

கண்ணியர்தன் தந்தை பட்ட பதினாறு லட்சம் மணிக்கடனை

திண்ணமுடன் சம்பாதித்து பாக்கியின்றி தீர்த்தபின்னும் எண்ணரிய பெரும் பொருள் திரட்டியே தானம் செய்து ஒத்துழையாமை இயக்கம் பெருக்கிய புண்ணியர், பெரும் பொருளனைத்தும் பொது நலத்திற்கே கொடுத்தார் புதுமையிலும் புதுமையன்றோ -(இந்து)

தேச பக்தர்களைத் தொடர்ந்து வளைய வளையவரும் துப்பறியும் போலீசார் பற்றி அக்கால நாடக மேடைகளில் நகைச்சுவையாகப் பாடியது.

போலீஸ் புலிகூட்டம்-கம் மேல் போட்டு வருகிறது கண்ணோட்டம் (போ)

வட்டமேஜை மாநாட்டுக்குக் காந்தியடிகள் லண்டனுக் குச் சென்றபோது, பாஸ்கரதாஸ் எழுதி கே. பி. சுந்தராம் பாள் பாடியது :

காந்தி லண்டன் சேர்ந்தார் கைகூப்பித் தொழுவீர்

கைகூப்பித் தொழுவீர்-தொழுவீர்.-தொழுவீர் (காந்தி)