பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கவிஞர் ●。 ♥በየ. இ.

சாந்தியில்லாது பேசும் சர்ச்சில் இனத்தவரே

ஆழ்ந்து நன்றாக யோசிப்பிா!

யோசிப்பீர்-யோசிப்பீர்-யோசிப்பீர்-(காந்தி) முப்பது கோடி மக்கள் முயற்சிக்கோர் தியாகியாம்! அற்புத ஞான யோகியாம் யோகியாம்!

யோகியாம் யோகியாம் எங்கள்-(காக்தி) அடுத்துவரும் பாடல் பகவத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரைத் தூக்கிலிட்டபோது, நாடக மேடைகளில் ஒலித்த பாடல்:

சிறைவாயில் கண்ணிர் வடித்தாள் பாரத மாதா-(சிறை) கறையொன்று மில்லாக் காளையர் மூவரைக் கழுத்தை நெறித்ததனாலே கவலை கொண்டே-(சிறை)

(தொகையறா) மறந்திட முடியாத கம் மாதாவின் சேவையில்

மனம் வைத்து முயன்றதாலே பெறற்கரிய பகவத்சிங் ராஜகுரு சுகதேவைப்

பிரிந்தே வருந்துகின்றான் கம் அன்னை பாரதமாதா!.

(பாட்டு) குற்றம் ஒருவர் புரிய மற்றவரையே வதைக்கும்

கொடியவர் செயலதனால் குவலயத்தில் -(சிறை)

(தொகையறா) தனக்குவமை யில்லாத சீலர்களைத் தூக்கிலிட்டுத்

தாய்தந்தையர்கள் காணாமலே

சட்லஜ்ருதிகரையிலே கொண்டு போய்வைத்து

தகனம் செய்திட்ட சண்டாளரின் கிணக்குடல் பிடிங்கியே காக்கை கழுகுக்கு

நிச்சயம் உணவாக்குவேனென்று கிற்கின்றாள் நமதன்னை உக்ரமாக ளித்தாய்

நீண்டதோர் சூலம் ஏந்தி