பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# ,

170 கவிஞர் கு. சா. கி.

வீட்டிற்கு வீடிது மெய்யாக வேண்டுமே மீட்சிபெறத் தூண்டுமே-பாஸ்கரன் ஆட்சித் தமிழ் தோன்றுமே-மிகமுழங்கிடும் (ராட்டி) காந்தியடிகளுக்கு முன் இந்திய தேசத்தின் மாபெருந் தலைவராய்த் திகழ்ந்த லோகமான்ய பாலகங்காதர திலகர் காந்தியடிகளாரும் போற்றி வணங்கும் ஞானியாக விளங்கிய வராகும்:

தென்னாட்டுத் திலகரென்று புகழ்பெற்ற வ.உ. சிதம்பர னார், சுப்ரமணிய சிவா, மகாகவி பாரதி, விபினச்சந்தரபாலர் போன்ற தீவிர வாதிகளின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்த வேதாந்த வித்தகர் திலகர் மறைவு குறித்து அக்கால நாடக நடிகர்கள் பாடிய பாடல் -

லோகமான்ய பால கங்காதர திலகர் தேகவியோகமானதால் வருந்துதே உலகம் (லோக)

இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்ந்த வரும், தான் மட்டுமின்றித் தன் மனைவி, சொரூபராணி, மகன் ஜவஹர்லால் நேரு, மகள்கள் விஜயலகஷ்மி பண்டிட், கிருஷ்ணா ஹத்தீசிங், ஆகிய குடும்பத்தார் அனைவரையும் அடுத்தடுத்து, அடுக்கடுக்காகச் சிறைக்கனுப்பி அளவற்ற இன்னல்களை ஏற்றவரும், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆனந்த பவனம் என்ற மாளிகையை சுயராஜ்ய பவனமென மாற்றித் தேசத்திற்களித்தவரும், வீராங்கனை இந்திராகாந்தி யின் பாட்டனாருமாகிய மோதிலால் நேருவின் மறைவு குறித்துப் பாடியது:

(தொகையறா-1)

ஆயிரத்தி எண்ணுற்றி அறுபத்தோராம் ஆண்டில் அவதரித்த தூயகுணத் தெய்வீகத்துரைராஜ சிகார சுகுண: சீலன்தாயகத்தின் விடுதலைக்கே தனையர் சுற்றம் மனை வியுடன்

சிறைக்குட்பட்டோன் நேயன் உயிர் பிரிந்த செய்திதனைக் கேட்டு காந்திமகான்

நெஞ்சமது நைந்து கொந்தார்.