பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 கவிஞர் கு. சா. கி.

வெடிகுண்டு வீசி வெள்ளையர்களைக் கொன்ற சதி வழக் கில் தூக்குமேடை ஏறிய பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய இளம் தேசபக்த வீரர்களைப் பற்றிக் காந்தியடிகள் சொன்ன கருத்து என்ன தெரியுமா? ஒரு மகோன்னதமான லட்சியத் திற்காகத் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்ட அம் மாவீரர்களின் தேசபக்திக்கு நான் தலை வணங்குகிறேன்: கண்ணிர் வடிக்கிறேன். ஆயினும், தேசத்தின் சேவைக்காக ஜீவித்திருக்கவேண்டிய வீர இளைஞர்கள் பலாத் காரப் புரட்சியில் இறங்கி, இத்தகைய அழிவுப்பாதையில் தங்களையே அழித்துக் கொள்வதை என் அகிம்சாதர்மம் ஒரு நாளும் ஆதரிக்காது என்று கூறினார். என்னே அவரது கருணை உள்ளமும், லட்சியப் பிடிப்பும்! அம் மாவீரர்களின் மறைவு குறித்து அந்நாளைய நாடக மேடைதோறும் முழங்கிய பாடல் இதுதான்:

பகதூர் பகவத் சிங்கம்-தேசபக்தி மான்கள் தங்கம் சுகதேவ் ராஜகுரு-தோழமை இலங்கும் (பக)

சுகுண ரீகிருஷ்ண சிங்கமவர் தரும் தூய வீரகற்

பாலனாம் சுதந்தரம்சேர் இந்தியாவே துலங்கவந்த கற்சீலனாம்(பக)

புகுந்தார் சிறைதணிலே புரட்சி வாழ்க்கையிலே பகைமையால் பெரும் பழியை வாங்கிட பாவம்சேர் போலீஸ் கமிஷனர் மாண்ட வழக்கில் மீண்டும் இவரை வலிய சேர்த்திடலாயினர் அந்தோ சித்திரவதை அகம்பாவமிதே வெந்தும் வேகாமலிருந்த பிணங்களை வேட்டை செய்தது அரசாங்கமே வெட்கம் கெட்டோம் துக்கப்பட்டால் வீரர்கள் பழி ஓங்குமே இரவுஏழு மணிக்குத் தூக்கில் இடுவதற்கொரு சட்டமா இறந்தவர் பிணத்தை ராவி நதியில் விட இவர் இஷ்டமா