பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 173

வெந்தும் வேகாமல் இருந்த பிணங்களை

வேட்டை செய்த தரசாங்கமே வெட்கங் கெட்டே துக்கப்பட்டால்

வீரர்கள் பழிஓங்குமே(பக)

இது ஒரு தேசபக்த னின் ஜீவிய லட்சிய முழக்கப் பாடலாய் ஒலிக்கிறது.

(நந்தனார் சிதம்பரம் போகாமல் இருப்பேனோ

என்ற மெட்டு)

செஞ்சுருட்டி-ஆதி

சுதந்திரம் இல்லாமல் இருப்பேனோ-வெறும் சோற்றுக்கு உடல் சுமந்து மரிப்பேனோ-நான் (சுத)

விடுதலை யடையாமல் விடுவேனோ-என்னை விற்று உடலை வளர்த்துக் கெடுவேனோ-நான் (சுத)

மானத்தைப் பெரிதென்று மதிப்பேனோ -அன்றி மாற்றார்க்கு உழைத்துடலை வளர்ப்பேனோ-கான் (சுத)

தொழுதுடல் சுகிப்பதைத் தொலைப்பேனோ-என்றும் தொழும்பனென்று பெயர் எடுப்பேனோ-கான் (சுத)

பயமின்றித் தருமத்திற்கு உழைப்பேனோ-பெரும் பாபங்கள் பல செய்து பிழைப்பேனோ-நான் (சுத)

ஞான சுதந்திரத்தை அடைவேனோ-இன்னும் வீணுக்கு உழைத்தடிமை தொடர்வேனோ-நான் (சுத)

1856ம் ஆண்டு சிப்பாய் புரட்சியை அடக்கி ஆங்கிலே யர் ஆட்சி இந்தியா முழுவதும் வெரூன்றிப் பரவுவதற்குத் திட்டமிட்ட காலம் அன்று. இங்கே ஆங்கில ஆட்சியின் ராணுவத் தளபதியாய் இருந்த ஜனரல் நீலன் என்பவன் செய்த கொடுமைக்கு அளவே இல்லை. வட இந்தியாவில் நூற்றுக்கணக்கான கிராமங்களைச்சூறையாடினான்:தீயிட்டுக்