பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 கவிஞர் கு. சா. கி.

கொளுத்தினான். கண்ணெதிரே கண்ட மக்களையெல்லாம் கொன்று குவித்தான். சாலை மரங்களின் கிளைகள்தோறும் பிணங்களைத் தொங்கவிட்டான். நூற்றுக்கணக்கான பிணங் களைக் குழியில் தள்ளி பெட்ரோல் ஊற்றி எரி மூட்டினான். அத்தகைய கொடியவனுக்குப் பிற்காலத்தில் ஆங்கில ஆட்சி சென்னை மெளண்ட்ரோட்டில், இன்று அண்ணா சிலை இருக் கும் இடத்தில் சிலைநிறுத்தி விழாக்கொண்டாடியது. அந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்று அந்தக் காலத்திலேயே தேசீயத் தலைவர்கள் எல்லோரும் கிளர்ச்சி செய்தார்கள்.

அந்தக் கொடுங்கோலனின் சிலையை அகற்றவேண்டும் என்ற கிளர்ச்சிக்கு ஆதரவாக அன்று நாடக மேடைகள் தோறும் ஒரு பாடல் முழங்கியது. மதுரை பாஸ்கரதாஸ் இயற்றிய அப் பாடல்தான் இது.

(பாட்டு)

கெருவம் மிகுந்த நீலன்-மகாக் கேவலக் கொடுங்

கோலன்-அவன் உருவத்தை இந்த ஞாலம் உடைத்தெறிவது தான் சீலம் (கெ) தருமம் மிகுந்த சென்னையில்-சண்டாளன நீலனின்-சிலை கிரந்தரமாய் நிற்பதோ இன்னிலையை நாம் சகிப்பதோ

(கெ)

(தொகையறா)

ஆயிரத்தி எண்ணுற்றி ஐம்பந்தாறாம்

ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி

யூரீகாசிக் கிளர்ச்சிக்குப்பின் ஜெனரல் நீலன்

இரத்த வெறித்திமிர் மீறியே

தூயகுணச் சீக்கியர் வாழ் கிராம மெங்கும் வெள்ளைத்

துருப்புக்கள் தனை யேவியே

தாயென்றும் சேயென்றும் தள்ளாத கிழவரென்றும்

தயவு தாட்சண்ய மின்றியே