பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i84 கவிஞர் கு.சா. கி.

அடுத்த தீபாவளிக்கு

எனக்கும் எங்கம்மாவுக்கும்

அச்சடி கொட்டடி புள்ளிகள் மேவிய சித்திரக் கைத்தறி வித்தகத் தாவணி (வாங்) முக்தானை முகப்பினிலே மோதிலால் பெயருமிட்டு முத்துசாமிச் சீடன் மெச்சிப் பாடுங் கதருடை (வாங்)

வேறு ஒரு பாடல் இராகம் : பிலஹரி தாளம் : ஆதி (பாட்டு)

பாடுபட்டதன் பலன் கண்டோம்-பாரத மக்கள் (பாடு) பாழும் அடிமை நீங்கி நாளும் சுயாட்சி ஓங்க (பாடு) தேடக்கிடையாத் தங்கம் சித்த வைராக்கியத்துங்கம் (பாடு செல்வ ராஷ்டிரபதி என்னும் ஜவஹர் சிங்கம் (பாடு) பீடு பெருகும் காங்கிரஸ் பீடத்தமர்ந்த யோகம் நாடும் சட்டசபையில் நாம் அடைந்தோம் உத்தியோகம் அதனால்

பரதேச உடையை நீக்கவும், பாரத மக்களைக் காக்கவும் தனக்குக் கதர்ப்புடவை, அதுவும் முந்தானையில் மோதிலால் பேர் போட்ட புடவை வேண்டுமென்று கேட்கிறாள்: யாரிடம்? கோவலனிடம் மாதவிகேட்கிறாள்! இது சரிதானாகாலப் பொருத்தம் உண்டா... என்பதைப் பற்றியெல்லாம் இதைப் பாடுகின்ற நடிகைக்கோ கேட்கின்ற ரசிகர்களுக்கோ தெரியாதென்றாபொருள். இல்லவே இல்லை அடிமைப்பட்டுச் சோர்ந்து கிடக்கும் மக்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தேசீய எழுச்சியைத்துண்ட வேண்டும் என்ற நன்னோக்கோடுதான் நாடக இலக்கணத்திற்குப் பொருத்த மற்ற இத்தகைய தவறுகளைச் செய்தார்கள். அக்கால நடிக நடிகையர்கள், இத்தகைய அசம்பாவாவிதங்களை யெல்லாம் மனத்திற்கொண்டுதான் சங்கரதாஸ் சுவாமிகள் சிலப்பதி காரத்தைச் சிதைத்து விட்டார் என்ற குற்றச் சாட்டும் எழுந்தது. புலவர்கள் வட்டாரத்தில்.