பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கவிஞர் கு. சா. கி.

தேவக்கோட்டை கருப்பையா சேர்வை, கே. எஸ் அனந்த நாராயணஐயர், கண்ணுசாமிபிள்ளை, (T.K.S. சகோதரர் களின் தந்தையார்) சி. கன்னையா, கரந்தை ராமையா, தங்கமணிப் பத்தர், பண்டிட் எஸ். எஸ். ஆனந்தம், சண்முகசுந்தரப் புலவர், கார்குமிழி கோவிந்தசாமி, எஸ். எஸ். சாப்ஜான், எஸ். எ. பொன்னுசாமி, இப்படி எண்ணற்ற நடிகர்கள் இருந்தனர்.

மேற்கண்ட நடிகர்கள் பெண்வேடமணிந்து நடிக்கும் போது, அவர்கள் ஆண்கள்தான் என்று சொன்னால் யாகம் நம்பவே மாட்டார்கள்.

சிறுவர் நாடகக் குழுவிலிருந்து பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய எஸ். ஜி. கிட்டப்பா, அவ்வை டி. கெ. சண்முகம், ஏ. பி. நாகராஜன், புரட்சி நடிகர் எம். ஜி. ஆர், சி வா ஜி கணே ச ன், பி. யு. சின்னப்பா, கே.பி. கேசவன், கே.பி. காமாட்சி, எம். கே. ராதா, சி. எஸ். ஜெயராமன் ஆகிய அனைத்து நடிகர்களும். ஆரம் பத்தில் சிறந்த பெண் வேடதாரிகளாக விளங்கியவர்களே என்ற ரகசியம், உங்களில் பலருக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை.

முதலில் பாலர் நாடகக் குழுவைத் தோற்றுவித்தவர்

இங்ங்னம் புகழ்பெற்ற நடிகர்கள் அளவற்ற செல்வமும் செல்வாக்கும் பெற்றதன் காரணமாகக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் அற்றவர்களாக இருந்தனர் என்பதை முன்பே குறிப்பிட்டேன். -

மக்களின் ஆதரவு தமக்கு இருப்பதால், தாங்கள் ஏற்றுள்ள பாத்திரங்களுக்குரிய வரம்புகளை மீறிச் சகநடிகர்களை மேடையிலேயே இழித்தும் பழித்தும் பேசி யும் பாடியும் கைதட்டல் பெறுவதும், சற்றுத் திறமை குறைந்தவர்களை அவமானத்திற்குள்ளாக்குவதும் சகஜமான நிகழ்ச்சிகளாக அக்கால நாடகமேடையில் நிகழ்ந்தன.