பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கவிஞர் கு.சா.கி.

கண்ணகி, மாதவி, கோவ ல், பாண்டியன் ஆகிய பிரதான பாத்திரங்களின் சிறப்பைக் குறைக்காமலும், இன்னும் சொல்வதானால் மேற்கண்ட பாத்திரங்களின் பெருமையைச் சற்று உயர்த்தியும் மிகைப்படுத்தியும்கூட, சிலப்பதிகார மூலக்கதைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துக் காட்ட முடியும்.

மேலும் தமிழினத்தின் பண்டைய பெருமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் வரலாற்றுக் காவியமாகவே இயற்றப் பெற்றிருப்பதால், சிலப்பதிகாரத்தில் கதையம்சம் மிகவும் குறைவு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

வஞ்சிக்காண்டம் இல்லாமலே-அதாவது, புகார்க் காண்டம், மதுரைக் காண்டத்தோடு கண்ணகி கோவலன் கதை நிறைவு பெற்றுவிடுகிறது. இதை வைத்துக் கொண்டு, அக்கால முறைப்படி நான்கு ஐந்துமணி நேரம் நடைபெறும் ஒரு நாடகத்தை உருவாக்கிக் கொடுப்பதென்பது அவ்வளவு எளிதான செயலல்ல என்பது, நாடகப் படைப்பின் நுணுக்கம் உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.

இனி சுவாமிகள் கோவலன் நாடகத்தில் செய்த மாற்றங் கள் என்ன? அதனால் பாத்திரங்களின் சிறப்பு எப்படி உயர்த்தப் பெறுகின்றது என்பதைக் காண்போம். சிலம்பில் வரும் கண்ணகி பெருநிதிக் கிழவன் மாநாய்க்கன் மகளாகத் தான் அறிமுகமாகிறாள். ஆனால் நாடகத்தில் வரும் கண்ணகியோ சாதாரண மனிதக் கருவில் தோன்றியவளாக அல்லாமல், இறைவனின் கருணையால் வழங்கப்பெற்ற மகளாகப் பொன்னி நதியின் வெள்ளப் பெருக்கில் மிதந்து வரும் ஒரு தங்கப் பேழைக்குள்ளிருந்து கிடைக்கின்றாள்.

காவிரியில் நீராடிக் கொண்டிருக்கும்போது ஆற்றில் மிதந்து வரும்பேழை தனக்குரியது என்று மாசாத்துவான் சொல்லுகிறான். பேழைக்குள் இருக்கும் பொருள் தனக் குரியது என்று மாநாய்க்கன் கூறுகிறான். ஒப்பந்தப்படி பேழையை மாசாத்துவானும் பேழைக்குள் இருந்த