பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கவிஞர் கு. சா. கி.

தமிழகத்தில் குழந்தை நாடகம் தமிழில் என்ன இருக்கிறது?

இப்படிச் சிலர் பேசுவதைப் பல முறை கேட்டிருக்கிறேன். இது, ஆங்கிலத்திற்கு மட்டுமே தங்கள் அறிவு அனைத்தை யும் அடகு வைத்துவிட்டவர்களின் அவலக் குரலாகும்.

தமிழில் எல்லாம உண்டு! இப்படிப் பேசும் சில அதி தீவிரத் தமிழ் பற்றாளர்களை யும் பார்த்திருக்கிறேன்!

இருவேறு துருவங்களாக ஒலிக்கும் இந்த வாதங்கள் இரண்டுமே, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஊறு செய்வன வாகும்.

முந்தியவர்கள். தமிழ் இலக்கிய வளர்ச்சியையே விரும் பாது, தங்களுக்குத் தாங்களே சபித்துக்கொள்பவர்களாகவும், பிந்தியவர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தடை கற்களாக வும் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

சமுதாயம், அரசியல், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு ஆகிய தேசீய மாறுபாடுகளுக்கும் ளளர்ச்சிக்கும் இன்றியமையாத வகையில், அவ்வப்போது தேவைப்படும் முறையில், யாருடைய விருப்பு வெறுப்புக்களை யும் எதிர்பார்க்காமலே, அறிஞர்கள் இலக்கியங்களைத் தோற்றுவிக்கின்றனர். அவற்றுள் வலிவும் பொலிவும் மிக்கவை நிலைத்து நிற்கின்றன. மற்றவைதான் தோன்றிய அடிச்சுவடே தெரியாமல் மறைந்துவிடுகின்றன.

இது எல்லா நாடுகளுக்கும், எல்லா சமுதாயத்திற்கும் எல்லா மொழிகளுக்கும் உரிய பொது நியதியாகும்.

காலத்திற்குத் தேவையான இலக்கியங்களைத் தோற்று விக்க வேண்டும் என்னும் உணர்ச்சியும் எழுச்சியும் உள்ள அறிஞர்களைப் பெறாத சமுதாயம், அதன் வளர்ச்சியிலும் பின்தங்கியதாகவே இருக்குமென்பது கண்கூடு.