பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கவிஞர் கு. சா. கி.

கலைச் செல்வங்களைக் கைமாறு கருதாது வழங்கிய நாடகக் கலைத்தாய், நம் வாழ்வுக்கும் வழி வகுத்துக் கொடுத்த அன்னை-அங்ங்னம் நலிந்து வாடுவதை, நன்றியுள்ள எந்தக் கலைஞனும் சகித்துக் கொள்ளுதல் நன்றன்று-இன்று இந்தத் துறையில் பிரபலமாயிருக்கும் கலைஞர்கள் ஓரளவாவது, இது பற்றி சிந்திக்க வேண்டும்.

சமூக சீர்திருத்த நாடகங்கள்

சமூக சீர்திருத்த நாடகங்கள் ஏதோ அண்மைக்காலத். தில்தான். அதாவது ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குள் தான் தோன்றியது போலவும், அதற்கு முன்பு தமிழ் நாடக மேடைகளில் ஒரே புராண இதிகாசக் குப்பைகளே நிறைந்திருந்தது போலவும், ஒரு கட்டுப்பாடான பிரச்சாரமும், அதுதான் உண்மை என்ற ஒரு தவறான மயக்கமும், சிலரிடம் இருப்பதைக் காணுகின்றேன். இது உண்மைக்கு மாறான கருத்தாகும்.

தமிழகத்தில் நாவல்கள், சிறு கதைகள் போன்ற புதினங்கள் தோன்றத் தொடங்கிய காலத்திலேயே, அதாவது சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழில் சமூக நாடக முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டிருப்பதைக் காணு கின்றோம்.

இராமசாமி ராஜா என்பவர் பிரதாயச் சந்திரா என்ற நாடகத்தையும், காசி விசுவனாத முதலியார் என்பவர் டம்பாச்சாரி விலாசம் என்ற நாடகத்தையும் எழுதி வழங்கியதின் மூலம், முதல் சமூக நாடகாசிரியர்கள் என்னும் பெருமைக்கு உரியவர்களாகத் திகழுகின்றார்கள். இவர்களை அடுத்து மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, பரிதிமாற் கலைஞர். பம்மல் சம்பந்த முதலியார். ஜே.ஆர். ரெங்கராஜு, ஏகை சிவசண்முகம் பிள்ளை, சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் என்ற தொடர் வரிசையில், மிகப் பிற்காலத்தில் தோன்றியவர்கள்தான், டி.கே.முத்துசாமி.