பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

விளக்குகிறது. இதனால் நாடகங்களினால் நாட்டுக்கு ஏற். பட்ட நன்மைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தீவெட்டி வெளிச் சத்தில் நாடகங்களை இயக்கிய முறை, தெருக்கூத்து நாடகங்களை நடத்தியமுறை ஆகியவைகளை அறிய முடிகி றது. மேலும் இதனுள், நாடக மேடையில் அன்று பாடப் பட்டு இன்று நாம் அறிந்து கொள்ளும் நிலையில் இல்லாத பல அரிய பாடல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நாடகம் பற்றிய எல்லா விவரங்களையும் தன்னகத்தே பெற்றுள்ள இந்நூலை நாடகக் கலைக் களஞ்சியம் என்றே குறிப்பிட லாம்.

நாடகக் கலையின் மறுபதிப்பாக, மக்களின் மனத்தை எளிதில் கவரும் சாதனமாக, பொழுதுபோக்கும் கருவியாக ஏற்றமிகு கருத்துகளைப் பரப்பி, எழுச்சி மிகு சமுதாயத்தை உருவாக்கத்தக்க காலக் கண்ணாடியாக விளங்கும் திரைப் படத்துறையைப் புதிய கண்ணோட்டத்தில், புரட்சிக் கருத்து களை மக்களின் உள்ளங்களிலே விதைத்து வளர்க்கும் பொறுப்பை எதிர்காலத்திலாவது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாடகக் கலை புனர்வாழ்வு பெற்றால்தான் திரைக் கலைக்குக் கலைஞர்களை உருவாக்க முடியும். நூலாசிரியர் கு. சா. கி. அவர்களின் இந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் எதிர்காலம் அமைய வேண்டும் என விழைகிறேன். தமிழ் நாடக ஆய்வு வளர்ச்சிக்கு பயன்படக் கூடிய இவ்வரிய நூல் இரண்டாம் பதிப்பாக வெளி வருவது குறித்து மகிழ்வடைகிறேன்.

அன்பன், சு. செல்லப்பன்