பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

உருப்படிகூடப் பாடாமல், தொடக்கம் முதல் இறுதிவரை பிறமொழிப் பாடல்களையே பாடும் கொடுமையைத் தடுத்து நிறுத்தும் துணிவு-சொரணை-தமிழ் மக்களுக்கு வர வேண் டாமா? என்பது ஆசிரியர் கேள்வி. ஒசையின் அளவு, இசை யமைப்பு, பண்ணமைப்பு, பாடலமைப்பு, தாளவகை, தூக்கு, பிண்டி, பிணையல், வரிப்பாட்டு, வண்ணங்கள், யாழிசை, குழலிசை, ஏழிசை, இசை அலகு பெறல், பண்களின் பெயர்கள், இசையின் எண்கள் முதலியவற்றை தனித்தனி யாக விளக்கிக் காட்டும் அளவுக்கு தமிழிசை ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே திருத்தமாகவும் விளக்கமாகவும், சிறப்பாகவும் அமைந்திருக்கிறது' என்பது இசையைப் பற்றிய ஆய்வில் கண்ட முடிவாக, அறிஞர்கருதுவர். இத்தகைய சிறப்புமிக்க நிலையிலிருந்த தமிழிசை, பிறமொழிப் பாடல்களின் ஆதிக்கம் பெறும் நிலையினை அடைந்ததைக் குறித்துத் தமிழகம் எண் ணிப் பார்க்க கடமைப்பட்டுள்ளது. இசைக்கருவிகள் தோற். கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி என மூவகைப்படும். தோற்கருவி முழவு எனப்படுகிறது; துளைக் கருவி குழல் ஆகும்; நரம்புக் கருவி யாழ் எனப் பெயர் பெற்றுள்ளது. முழவு, குழல், யாழ் ஆகிய முத்திறக் கருவிகளின் பெயர்களில் பெயர்களில் தமிழுக்கே உரிய தனிச் சிறப்பெழுத்தான ‘ழ’ கரம் இடம் பெற்றுள்ளதால் இவ்விசைக் கருவிகளைக் கண்ட வர்களே தமிழர்கள். இசையை வளர்த்தவர்களே தமிழர்கள் என ஆசிரியர் குறிப்பிடுவது தமிழிசைக்கு ஆக்கம் தருவதாகும்.

கலைக் களஞ்சியம்

சுருங்கக் கூறுமிடத்து இந்நூல் தமிழ் நாடகக் கலையின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் பற்றி அறிய உதவுகின்ற முழுமை பெற்ற நூலாகத் திகழ்கிறது. 19, 20 ஆம் நூற் றாண்டுகளில் இயங்கி வந்த நாடகக் குழுக்கள், நாடக நடிகர்கள், நாடக ஆசிரியர்கள் பற்றிய செய்திகளை விரிவாக