பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

என்று பாடியபடியே வருவான். வள்ளியைக் காணவரும் வேடனுக்கும், கதர்க்கப்பல் கொடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயினும் இதைக் கேட்கும் மக்கள் கரவொலி எழுப்பு வதோடு மீண்டுமொரு முறை (Once More) பாடக் கேட்பதை யும் நான் சிறுவனாக இருந்த பொழுது விழாக் காலங்களில் என் கிராமத்தில் நடந்த நாடகங்களில் கண்டது இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது. இவ்வாறாக விடுதலை இயக்கத்தில் நாடகக் கலைஞர்கள் கொண்ட பங்கை ஆசிரியர் மிகு விரிவாக நயம்பட எடுத்துரைத்துள்ளார். தெருக்கூத்துக் கலைஞர்கள் திறந்த வெளிகளில் நாடகம் போட்டுச் சுதந்திரக் கனலை அணையாது காத்து வந்ததை ஆசிரியர் அருமை யாகக் கூறுகிறார். அன்றைய நாடக மேடையில் ஒலித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட இத்தகைய உணர்ச்சியூட்டும் பாடல் களை இந்நூலில் நாம் காணமுடிகிறது. நாடகங்கள் கொள்கை பரப்புக் கருவிகளாகவும் பயன்பட்டுள்ளன. சாதிப் பிரிவு, தீண்டாமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பொதுவுடைமை, தொழிலாளர் தவிப்பு, முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் போன்ற சமுதாய சீர்திருத்த கருத்துகளை பரப்பியதில் பேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள், நகைச்சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் கதா கலாட்சேபங்கள் போன்றவை ஆற்றியுள்ள பெருந்தொண்டினைச் சான்றாக ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழிசை

நாடகம்பற்றிய தம்உரையில் திரு. கு. சா. சி. தமிழிசை பற்றிக் கூறியுள்ள கருத்துகள் சிந்தனைக்குரியனவாம். பழைய தமிழிசைப் பண்களே இன்று இராகங்கள் என்ற பெயர் பெற்று பிற மொழிகளில் புகுந்துள்ளன. தமிழிசை தலையாய இசையாயிருந்தும் பிறமொழி இசைதான் இசை என்ற நிலை உருவானது நியாயந்தானா நூற்றுக்கு நூறு தமிழர்களே நிறைந்திருக்கும் அவையில் ஒரேயொரு தமிழ்