பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

நகைக்காதா? என்பதுதான் என் கவலை' எனக் குமுறு கிறார். இவர் காலத்திலேயே நாடகத்திற்குப் பண்டைய ஏற்றம் நேரிட்டு இவர் உளம் மகிழும் நிலை உருவாக வேண்டும் என நாம் உளமார விழைவோமாக.

காடகங்களின் பயன்

நாடக வரலாற்றை விளக்கிய ஆசிரியர் நாடகங்களின் பயனைச் சுட்டிக் காட்டுகிறார். நாடக நிகழ்ச்சிகள் அவை தோன்றும் காலத்தில் நாடு இருக்கும் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவன என்பதைச் சுதந்திரப் போராட்டக் காலத்தில்-இருபதாம் நூற்றாண்டில் தொடக்க காலத்தில் நடைபெற்ற நாடகமேடைக் காட்சிகளைக்கொண்டு ஆசிரியர் விரிவாக விளக்குகிறார். அக்காலத்தில் வள்ளித்திருமணம் நாடகம் நடைபெறும்; தினைப் புனத்தில் வள்ளி ஆலோலம் பாடிக் குருவிகளை விரட்டுவாள்; அவளைக் காண வேலன் வேடன் வடிவில் அங்கு வருவான், அவ்வாறு வரும் அவன்.

ஆயலோட்டும் பெண்ணே ஆவியே என்னாருயிர்ச் சஞ்சிவியே ! மன்மதன் என்னும் பாவியே! மலர்க் கணைகள் தூவியே வாட்டுறாங் கண்ணே

(ஆயலோ)

என்று பாடிவர வேண்டும். - ஆயினும் சுதந்திரப் போராட்ட வேகத்தினால் உந்தப்பட்ட நிலையில் வேடன்,

கதர்க் கப்பல் கொடி தோனுதே கரம் சந்த்ர மோகனதாஸ் காந்தி இந்தியா சுதேச கதர்க் கப்பல் கொடி தோனுதே