பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

தொண்டினால் நாடகக்கலை புத்துயிர் பெற்றதை ஆசிரியர் வரலாற்றடிப்படையில் விரிவாக விளக்கிச் சொல்கிறார். 'இருபதாம் நூற்றாண்டு தொடங்கி அரை நூற்றாண்டுகள் வரை தமிழ் நாடகக் கலையின் பொற்காலம் என்றே கூற வேண்டும்' என்பது ஆசிரியர் துணிபு. ஒழுங்கும் கட்டுப் பாடும் நிறைந்த நாடகக் குழுவினர் மக்களிடையே பெற்ற செல்வாக்கினால் நாடகக்காரனுக்குக் கூத்தாடி, ஒழுக்க மற்றவன் என்றிருந்த அவப்பெயர் சிறிது சிறிதாக மறைந்து நடிகர்களைக் கலைஞர்கள் என்று போற்றும் நிலைமையும் வளர்ந்தது. பல்வேறு நாடகக் குழுக்கள் தோன்றின என்றா லும் அவற்றுள் காலப்போக்கில் கன்னையா கம்பெனி, நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி, டி. கே. எஸ். சகோதரர் கம்பெனி போன்ற ஒரு சிலவே நிலைத்து நின்றன. 1925 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரையிலான காலத்தை டி. கே. எஸ். சகோதரர்கள் சகாப்தம் என்றே கூறலாம் என்பதையும் ஆசிரியர் விளக்குகிறார். தமிழில் குழந்தை நாடகங்களும் தோன்றித் திறம்பட நடித்துக் காட்டப்பட்டன. நாடகத்திலிருந்து திரைப்படம் வளர்ச்சியுற்றது. திரையுலகிற்கு நாடகமேடை அளித்த நடிகர்கள் மிகப் பலராவார்.

இன்றைய நிலை

இவ்வாறு வளர்ந்து வந்த நாடகம் பல்வேறு காரணங் களால் இன்று சூன்யநிலையில் உள்ளது என ஆசிரியர் வருந்துகிறார். இந்நூற்றாண்டின் முன் அரைப்பகுதியில் போட்டி போட்டு வளர்ந்த நாடகவளர்ச்சி இன்று பொய்யாய் கவைாய், பழங்கதையாய்ப் போனதை எண்ணி வெதும்பு கிறார் தமிழுக்கென்றே தனியான இலக்கணம் வகுத்து அகத்தியம், பரதம் தொல்காப்பியம்' என்று வழிவழியாக எண்ணற்ற நாடக இலக்கண நூல்களைப் படைத்துப் பெருமை பேசிக் கொண்டிக்கும் தமிழ்க்குலம், இந்த அவல நிலைக்கு வரலாமா? நாளைய வரலாறு நம்மைக்கண்டு