பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிவுரை

உலகப் புகழ்மிக்க பல்கலைக் கழகங்களில் ஒன்றாகத் திகழும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவ்வை சண்முகம் அவர்கள், நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் பெயரால் ஏற்படுத்தியுள்ள அறக் கட்டளைச் சொற்பொழிவாக சென்ற 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நான் நிகழ்த்திய சொற்பொழிவைத்தான் 'தமிழ்நாடக வரலாறு' என்ற தலைப்பில் வானதி பதிப்பகத்தினர் 1979 ஆம் ஆண்டு. ஜூன் திங்களில் முதல் பதிப்பாக வெளியிட்டார்கள். இன்று மீண்டும் அந்த நூல் இரண்டாம் பதிப்பாக வெளி வருகிறது.

இந்த அறக்கட்டளைச் சொற்பொழிவை நான்தான் நிகழ்த்த வேண்டுமென்று என்னிடம் உரிமையோடும், உறுதி யோடும் வலியுறுத்தி, அன்புக் கட்டளையிட்டார் அன்றைய சென்னை பல்கலைக் கழக தமிழ்த் துறை தலைவரும் எனது கெழுதகை நண்பருமாகிய இளவல் டாக்டர் ந. சஞ்சீவி. அவர்கள். அவரது அன்புக் கட்டளையை மீற முடியாதபடி நானும் இந்த சொற்பொழிவை நிகழ்த்துவதற்கு இசைவு தந்தேன்.