பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புரை அமரர் திரு. எஸ். மகராஜன் அவர்கள் (நீதிபதி)

,'தமிழ் நாடக வரலாறு' என்ற இந்நூலை முதலி லிருந்து கடைசி வரையிலும் ஊன்றிப் படித்தேன். வியப்பும், விம்மிதமும் அடைந்தேன். இந்நூலின் ஆசிரியர் கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் படித்து பி. ஏ. , எம். ஏ. , பட்டம் வாங்கியவரல்ல. நமது இங்கிலீஷ் பள்ளிக் கூடங்களில் உண்மையை நேரடியாகப் பார்க்கும் முறையை கைவிட்டு விட்டார்கள். புத்தகமே பிரதானம் என்று நினைத்து இரண்டு கண்களையும் புத்தகத்தை வைத்து அடைத்துக் கொண்டு உலகத்தைப் பார்ப்போமானால், உலகம் எப்படி தெரியும்? இரசிகமணி டி. கே. சி. சொன்னது போல் ஜியாலஜி (Geology) என்பது பூமிக்குள் இருக்கிறது. அஸ்ட்ரானமி (Astronomy) என்பது வானத்தில் இருக்கிறது. பாட்டனி (Botany) என்பது காட்டில் இருக்கிறது. இது ஒன்றும் புத்தகத்தில் இருப்பதில்லை.

ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து திருமணம் செய்ய விரும்புகிற ஒருவனுக்கு ஒரு பெண் பாடசாலையின் ஆஜர் அட்டவணையைக் கையில் கொடுத்து, எல்லாப் பெண்களின் பெயர்களும் இதில் இருக்கின்றன. இதில் எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள் என்று சொல் வதைப்போல் உண்மையோடு உறவாடாது வெறும் புத்தகத் தோடு உறவாடும் நமது இன்றைய படிப்புமுறை நான் மேலே கூறியவர்றுதான் இருக்கிறது. -