பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூல் ஆசிரியரோ மூன்றாவது வகுப்பு முற்றுப் பெறுவதற்குமுன்பே தனது ஒன்பதாவது வயதிலேயே பள்ளிப் படிப்பிலிருந்து விடுதலை பெற்று நாடகக்குழு ஒன்றிலே நடிகராகச் சேர்ந்து விட்டார். அந்த நடிகர் உலகத்திலே மனிதனுடைய குணங்கள், அவனுடைய உணர்ச்சிகள், அவனுடைய பாவங்கள் இவற்றையெல்லாம் எப்படி சொற் களிலே எடுத்துக்காட்ட முடியும். நாடகப் பாங்கு என்றால் என்ன? உரையாடுவது எப்படி? சுவைபட நடிப்பது எப்படி? இசையினாலும், நடிப்பினாலும் மக்களுக்கு எப்படி எப்படி யெல்லாம்களிப்பூட்டலாம். ஒவ்வொரு நடிகனும் தன்னுடைய தனிப் பெருமையை மட்டும் தேடிக்கொள்ளாமல் நடிகர் குழுவோடு கூட்டு முயற்சி செய்து நாடகத்துக்கு எப்படி பெருமையை ஈட்டலாம், ஒருவரோடு ஒருவர் எவ்வாறு இங்கிதத்துடன் பழக வேண்டும் என்பதை - அந்தத்துடிப்பை நாடகத்தில் வருகின்ற காட்சிகள் மூலமாகவும், செயல் மூல மாகவும், சொற்கள்மூலமாகவும், எப்படி பிரதிபலித்துக் காட்ட லாம் என்பதையெல்லாம் நேருக்கு நேர் திரு. சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்மந்த முதலியார் போன்ற மேதை. களுடைய நாடகக் குழுக்களில் குரு மூலமாகவும், அவர்கள் நடித்த நாடகங்களிலே வேடங்கள் தாங்கி நடித்தும் ஐயம் திரிபுஅற தெரிந்து கொண்டவர். ஆகவேதான் இந்நாடக நூலில் தமிழ் நாடகம், சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்த முறை பற்றியும், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் முதலிய அண்டை மாநிலங்களில் நாடகக் கலையின் தன்மை எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் சுதந்திரப் போராட்ட காலங்களிலே எஸ். எஸ். விசுவநாத தாஸ் போன்ற தேச பக்த நடிகர்கள் நடிக்கும் போது நாட்டுப் பற்றோடு கொதித்தெழுந்து சட்டத் தடைகளை யெல்லாம் மீறி ராஜத்துரோகப் பாடல்களைப் பாடி அடிக்கடி தண்டனை பெற்று சிறைபுகுந்து நாடு விடுதலை பெறுவதற்கு அவர்கள் எவ்வாறு உதவியாக இருந்தார்கள் என்பதைப் பற்றியும் உள்ள செய்திகளை அழகாக வகுத்தும் தொகுத்தும் காரிய காரணத் தொடர்போடு சுவையானத்