பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 67

தனிப்பெரும் சிறப்பாக அமைந்திருப்பது, நாம் பெற்ற பேறு! தமிழுக்கே உரிய தனிச்சிறப்பு!

பொருளுக்கு மட்டுமின்றி, சொல்லுக்கும் இலக்கணம் கண்ட பெருமை நாம் பெற்ற பேறாகும்.

நாடகம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் ட்ராமா' (DRAMA)என்றும் ப்ளே'(PLAY)என்றும்சொல்லுகிறார்கள்

"ம்ராமா' என்ற சொல்லுக்கு நகல், அதாவது போலி என்ற பொருளையும், ப்ளே' என்ற சொல்லுக்கு விளை யாட்டு அல்லது பொழுதுபோக்கு என்ற பொருளையும் கூறக் கேட்டிருக்கிறேன்.

நாட்டியம்

நாட்டியத்தை நாடகத்தின் ஒரு கூறாகவே கொள்ளுதல்

மரபு.

நாடகம்-நாட்டியம் ஆகிய இரண்டையும் பொதுவாகக்

கூத்து என்று சொல்வது பண்டைய வழக்கம்.

புராணமோ, வரலாறோ, கற்பனையோ எதுவாயினும் களங்கள் சில அமைத்து, ஒவ்வொரு களத்திற்கும் காட்சிகள் பல தொகுத்து, அந்தந்தக் கதைகளுக்கேற்பப் பாத்திரங் களைப் படைத்து, அந்த பாத்திரங்களின் உணர்ச்சி பூர்வ மான பாடல்கள், நடிப்பு இவற்றின் வாயிலாக விளக்கிக் காட்டும் நீண்ட கதையம்ச முள்ளவற்றை நாடகமென்றும்,

ஒன்றிரண்டு குறிப்பிட்ட கருப்பொருள்களை மட்டும் அவயவங்களின் உணர்ச்சி பூர்வமான நடிப்பாற்றலால் விளக்கிக் காட்டும் ஆடற்கலையை நாட்டியமென்றும் கூறு

6) Isrns & 6ts.

இங்ங்ணம், கூத்து என்ற பொதுப்பெயரை வழங்கிய தற்குக் காரணம், பழங்கால நாடகங்கள் அனைத்தும், உரை நடையே இல்லாமல், பெரும்பாலும் பாடல்களும்,