பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கவிஞர் கு. சா. கி.

இப்படியே மற்றைய பாவைகளையும் இயக்கிக் கதை யின் கருத்தைத் திரை மறைவிலிருப்போர் பாடல்கள் மூலம் நிகழ்த்த அதற்கேற்ப மேற்படி பாவைகளை இயக்குவோர் திரைமறைவிலிருந்து பாவைகளின் கை, கால், தலை முதலியவற்றைப் பிணைத்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கருப்புநிற நூல்களை ஆட்டியும் அசைத்தும் இழுத்தும் தூக்கியும் தாழ்த்தியும் பாவைகளை இயக்கிக் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். பொதுவாக இதற்குப் பெயர் பொம்மலாட்டம் என்று கூறுவார்கள்.

தோற்பாவைக் கூத்து

முன்னே சொன்ன பொம்மலாட்டம்' என்ற பாவைகள் முப்பரிமாணம் உள்ளவையாகும். இதைத்தவிர, தற்காலத் திய ஒட்டுப்பலகை அல்லது அட்டை போன்று உறுதியாக உள்ள விலங்குகளின் தோலால் கதைக்கேற்ற பாத்திரங் களைத் தயாரித்து, கண், காது, வாய்,மூக்கு, முதலிய அவய வங்களுக்குச் சீரான துளையிட்டும், ஆடை அணிமுணிமுடி போன்ற ஒப்பனைக்கும் துளையிட்டும், கழுத்து, கைகள், கால்கள், நினைத்தவாறு திருப்புதற்கேற்ற வகையில் இணைத்து, ஒரு வெள்ளைத் திரைக்குப் பின்னே மேற்படி தோற்பாவையை நிறுத்தி, அதற்குப் பின்னே ஒரு விளக்கைப் பிரகாசமாக வைத்து, அந்தத் தோற்பாவையின் நிழல் வெள்ளைத் திரையில் விழும்போது, எதிரே இருந்து பார்க்கும் மக்களுக்கு உண்மையான உருவங்களைப் போல் தோற்ற மளிப்பதுடன், அதை இயக்குவோனும் பின்னே இருந்து கதை சொல்லும் முறைக்கேற்பப் பாவையை இயக்கிக் காண்போரின் இதயத்தில் நவரஸ உணர்ச்சிகளையும், கதைக்கேற்ற நடிப்பாற்றலையும் தத்ரூபமாக காண்பதைப் போன்ற பிரமிப்பையும் மகிழ்ச்சியையும் கொள்ளுமாறு செய்துவிடுவார்கள்.

இதற்குப் பெயர்தான் தோற்பாவைக் கூத்து என்ப தாகும்.