பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 75

கூத்து வகை

மேலே சொன்ன மரம், துணி, மண், தோல் ஆகிய பாவைகளால் நடித்துக் காட்டப்பெற்ற பொம்மலாட்டம் அல்லது பாவைக் கூத்து ஆகிய கூத்து வகையோடு, மனிதர் களே பலவகைக் கதைகளைக் கற்பித்தும், நாட்டில் அவ்வப் போது நிகழும் சில உண்மை நிகழ்ச்சிகளுக்கு உருவகம் தந்து கதைகளை அமைத்தும், அவைகளுக்கேற்ற வேடங்களைப் புனைந்தும், நடித்துக் காட்டி மக்களை மகிழ்வித்து வந்தன ரென்றும் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.

இவ்வகைக் கூத்துக்களுக்கு, புகழ்க்கூத்து, வசைக்கூத்து, வெற்றிக் கூத்து, விளக்கத்தார் கூத்து, வரிக் கூத்து, வரி சாந்திக் கூத்து, சாந்திக் கூத்து, சாக்கையர் கூத்து, இயல்புக் கூத்து, தேசிக் கூத்து, ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து என்று பல்வேறு பெயர்கள் வழங்கினர்.

இக்கூத்துக்கள் வேத்தியல் என்றும், பொதுவியல் என்றும் இருவேறு முறைகளில் நடித்துக் காட்டப் பெற்ற தாகச் சிலப்பதிகார உரையாசிரியரால் எடுத்துக் காட்டப் படுகிறது.

வேத்தியலும்-பொதுவியலும்

மன்னர்களுக்கென்று தனியிடத்தில் நடித்துக் காட்டப் பெறும் கூத்துக்கு வேத்தியல் என்றும், அவை தரத்தில் உயர்ந்ததாகவும், சிறப்புடையதாகவும் இருக்குமென்றும்,

மக்களுக்காகப் பொதுவிடங்களில் நடித்துக் காட்டப் பெறும் கூத்துக்குப் பொதுவியல் என்றும், அவை பாமர ரஞ்சக மாகச் சற்றுத் தரத்தில் தாழ்ந்தவையாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லவேண்டு ா னால், பிற்காலத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் மிகுந்த