பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கவிஞர் கு. சா. கி.

நாடகக் குழுவினர்களின் நாடகங்களையும், கிராமங்களில் நடைபெற்றுவந்த தெருக் கூத்து போன்ற தரக்குறைவான நாடகங்களையும் கூறலாம்.

இக் கூத்துக் கலையில் ஈடுபட்ட ஆடவர்களைக் கூத்தர், பொருநர், தோரியர், பாணர் என்றும், பெண்களைக் கூத்தி யர், விறலியர், பாடினி, கணிகையர் என்றும் கூறுவர்.

இக்கூத்துக் கலைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று ஆங்காங்குள்ள பேரரசர்கள், சிற்றரசர்கள், குறுநில மன்னர் கள் ஆகியோரின் அவை முன்பு ஆடியும், பாடியும், நடித்தும் தங்களின் கலைத்திறத்தால் அவர்களை மகிழ்வித்துத் தக்க சன்மானங்களைப் பெறுவர்.

இக் கலைஞர்களின் திறமையைப் புகழ்ந்து பல அரசர் கள் மானியங்களாகச் சில சிற்றுார்களையும், நிலங்களையும், மற்றும் பல்வேறு பரிசுப் பொருள்களையும் வழங்கிச் சிறப்பித் துள்ளனர். கூத்தாநல்லூர், விறாலிமலை என்ற ஊர்கள் இவற்றுக்குச் சான்று பகர்வனவாக இன்றும் இருப்பதைக் காணுகின்றோம்.

செல்லும் இடங்களிலெல்லாம் இக் கலைஞர்களுக்கு மன்னர்களும் மக்களும் வழங்கும் அளவற்ற செல்வங்களே, இவர்களை ஆடம்பரப் பிரியர்களாகவும், நெறியற்றவர் களாகவும், கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாதவர்களாகவும் செய்தன போலும்!

கலைச்சிறப்பும் கவர்ச்சியும் மிக்க இக் கூத்தியர்பால், அந்தஸ்து மிக்க சமுதாயப் பிரமுகர்கள் பலர் மயக்கம் கொண்டு தமக்கே உரிமையாக்கிக்கொள்வதும், அப்படித் தகாத உறவு கொள்ளும் பெண்களைக் கூத்தியார் என்று கூறும் வழக்கமும் வந்தன போலும்!

ஒழுக்க வரம்பு மீறி வைப்பாக வைத்துக்கொள்ளும்

ஏனைய பெண்களையும் சமுதாயம் கூத்தியார் என்ற பெயரிலேயே அழைப்பதை இன்றும் காண்கிறோம்.