பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 85

ஒருஜாதிக்கே உரியதாக இருந்த அக்கலை,இன்று உயர் வட்டாரங்களெல்லாம் விரும்பிப் போற்றிப் பயிலும் கலை யாகப் பரவலாக வளர்க்கப்படுவதைக் காணுகின்றோம். இனியேனும் அக்கலையின் புனிதத்தன்மை காப்பாற்றப் பட வேண்டும் என்று பிரார்த்திப்போமாக.

இசையிலும் கலப்படம்

இயற்றமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் நடுநாயகமாகத் திகழ்வது இசைத் தமிழ். "இழுக்குடைய பாடலுக்கு இசை நன்று' என்று ஒரு பழமொழியே உண்டு. மனம் இறை யருளைச் சுலபமாகப் பற்றுதற்கு இசையோடு கலந்து பண்களைப் பாடுவதே தமிழர்களின் மரபு. இது பற்றியே, "பண்ணோ டிசைபாடல் மறந்தறியேன்” என்று பாடினார் அப்பரடிகள். இறைவனைக்கண்ணும்,காதும்,வாயும்,மூக்கும், கையும், காலும் கொண்ட உருவவடிவினனாகக் கொள்ளாது,

ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே'

என்று போற்றினார், நாவுக்கரசர்.

ஏழிசையாய், இசைப்பயனாய், என்றுமுள தென் தமிழாய்'

இறைவனை இசைக்கலையோடும், இன்பத்தமிழோடும், ஒப்பிட்டுப் போற்றுவதன்றோ பண்டைய தமிழர் மதம்.

அத்தகைய தமிழிசைக் கலையின் இன்றைய நிலை என்ன? நூற்றுக்கு நூறு தமிழர்களே நிறைந்திருக்கும் அவை யில், ஒரே ஒரு தமிழ் உருப்படி கூடப் பாடாமல், தொடக்கம் முதல் இறுதிவரைப் பிறமொழிப் பாடல்களையே பாடும் கொடுமையைத் தடுத்து நிறுத்தும் துணிபு-சுரணை-தமிழர் களுக்கு வரவேண்டாமா?