பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 87

களுக்கேற்ப அந்தந்தச் சுரங்களின் பெயர்களைத் தாங்கிய பெண்கள் முனைந்து குரவைக் கூத்தாடுவதையும் காட்சிப் படுத்திக் காட்டியிருப்பது எத்தகைய அற்புதக் காட்சி!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய இந்த ஏழிசைச் சுரங்கள் விரவியாடுங் குரவைப்பண் கூத்தைப் பண்டைய மரபு வழிப்பட்டதாகக் குறிப்பிடுகிறாரென்றால், தமிழிசை யின் தொன்மைக்கு இதனினும் வேறு சான்று வேண்டுமோ?

மேலும், இன்றைய கர்நாடக சங்கீதத்தில் கூறப்படும் கர்த்தா ராகங்கள் ஜன்யராகங்கள் என்ற அமைப்பு முறை களும் பண்டைச் சங்க இலக்கிய இலக்கண நூல்களில் வரை யறுத்துக் கூறப்பட்டுள்ளன என்பது இசைத்துறை அறிஞர்கள் சிந்திக்கத் தக்கதாகும்.

எடுத்துக் காட்டாக, அண்மையில், பொள்ளாச்சித் தொழில் அதிபர் திரு. நா. மகாலிங்கம் அவர்களின் சக்தி அறநிலைய வெளியீடாகிய, அறிவனார் இயற்றிய பஞ்ச மரபு' என்னும் கடைச்சங்க இசைத் தமிழ் நூலில் உள்ள சில குறிப்புகளைச் சுட்டிக் காட்டுதல் நலமென்று கருதுகிறேன்.

இன்று கையாளும் கர்த்தா-ஜன்யராக முறையைப் போல் அன்றே கையாண்ட மூலப்பண்கள் முறைகள்

வருமாறு......

மூலப்பண்.:

1 செம்பாலை - பண்கள் எட்டு 2. படுமலைப்பாலை - பண்கள் இருபத்திரண்டு 9 o' செவ்வழிப்பாலை - பண்கள் பன்னிரண்டு

அரும்பாலை - பண்கள் இருபத்தாறு கோடிப்பாலை - பண்கள் பன்னிரண்டு விளரிப்பாலை - பண்கள் ஐந்து மேற்செம்பாலை - பண்கள் பதினெட்டு

p >

  • *