பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

95

அப்படித் தரித்தல் வெகு அழகாயிருக்கிறதென்று அவன் ஒருநாள் சொல்லியிருந்ததனாலேயே; மாலை நேரத்தில் தலைவாரிப் பொட்டிட்டுச் சிங்காரம் செய்துகொண்டு நடைத் திண்ணையிலிருந்து தமிழ்ப் பதங்களைப் பாடிக் கொண்டிருந்தால், அவன் பள்ளிக்கூடத்திலிருந்து களைத்து வரும்பொழுது. அதைக் கேட்டுக் களிப்புறுவான் என்று கருதியே; அவள் உண்பதும், உறங்குவதுங்கூட அவன் பொருட்டென்றே சொல்லவேண்டும், அவருடைய வாழ்க்கையை ஒரு நல்முத்து மாலைக்கு உவமைப் படுத்தினால், கணவன் மனப்படி ஒழுக வேண்டுமென்ற அவள் உட்கருத்தை அம் முத்துமாலையின் ஊடுசென்று, கோவை பிரியாது காக்கும், பட்டு நூலுக்குச் சமானமாகச் சொல்லலாம்’[1] என்று ஓரிடத்தில் அவளுடைய சித்திரத்தை எழுதி மாட்டியிருக்கிறார் ஆசிரியர். கணவன் தன்னைப் புறக்கணித்து அடித்துத் துன்புறுத்தியபோது அவள் துடித்த துடிப்பைக் கண்டு கல்நெஞ்சமும் கரையும்.

பிற பாத்திரங்கள்

னத் திண்மையில்லாமல் சஞ்சலமுறும் கோபாலனை யும், வயசான காலத்திலும் சபலம் போகாமல் இரண்டாந்தாரம் மணந்து கொண்டு அந்த மனைவிக்கும் அவள் தாய்க்கும் அடிமையாகித் தம் மக்கள் மேல் உள்ள அன்பைத் தளரவிடும். அவனுடைய தந்தையாகிய சேஷையரையும், கல்லவருக்குக் கொடுமை புரியும் குண்டுணி சங்கரனையும், வஞ்சகமாகச் சாவித்திரியைக் கெடுக்க எண்ணும் நாகமையரையும் இந்த நாவலில் காண்கிறோம்.

சீதையம்மாள்

நாராயணனுடைய தாயாகிய சீதையம்மாள் வறுமை யிலும் சொந்த முயற்சியால் பிழைக்கத் தெரித்தவள்.


  1. ப. 156