பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

101

3. கல்கியின் காவல்கள் ∎ፀ!

வாதாபிக் கோட்டையிலிருந்து விநாயகரைக் கொண்டு வந்து தம்முடைய ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் பிரதிட்டை செய்தார் என்றும் எடுத்துச் சொல்வார்கள். பல்லவர் வரலாறுகளே கன்ருகப் படித்தவர்களுக்கு இந்த வாதாபிப் போரின் விவரமெல்லாம் தெரியும்.

மகேந்திரவர்ம பல்லவர் முதலில் சமணராக இருந்து பிறகு திருநாவுக்கரசருடைய உபதேசத்தால் சைவர் ஆனர்: வாதாபிக்குத் தலைவனகிய சளுக்க மன்னன் புவிகேசி மாபெரும் படையுடன் தென்னுட்டிற்கு வந்து காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டான்; அவன் கொள்ளிடக் கரை சென்று அங்கே சேர பாண்டிய களப்பாள மன்னர் களைச் சக்தித்தான்: காஞ்சிக் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் புலிகேசி திரும்பிச் சென்ருன்; சளுக்கரின் படை யெடுப்புக்குப் பழிக்குப் பழி வாங்கும் பொருட்டுப் பல்லவ சைனியம் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்றது: வாதாபி நகரில் புகுந்து போர் செய்த பல்லவப் பெரும் படைக்குத் தலைவராகப் பரஞ்சோதி விளங்கினர்; பல்லவப் படை வாதாபியைக் கைப்பற்றி அந் நகரைத் தீக்கு இரை யாக்கியது; படைத்தலைவர் பரஞ்சோதி பிற்காலத்தில் தம்முடைய அரசியற் பணியை விட்டுத் தம் ஊராகிய திருச்செங்காட்டங்குடி சென்ருர். அவரே அறுபத்து மூன்று காயன்மாருள் ஒருவராகிய சிறுத்தொண்டர் என்று வழங்கப் பெற்ருர்.' -

இந்த நிகழ்ச்சிகளே வரலாற்று நூல்களால் அறியலாம். பெரு வீரர்களாகிய மகேந்திர வர்மரும் அவர் குமாரர் நரசிம்மவர்மரும் சிற்பம், சித்திரம், இசை, நடனம் என்ப வற்றில் ஈடுபாடுடையவர்கள். முன்னவர் குகைக் கோயில் களைக் குடைந்தார்; பின்னவர் மாமல்லபுரக் கோயில்களே.

1. கல்கி: சிவகாமியின் சபத்ம், ஆசிரியர் முன்னுரை, 7 . به.