பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

103


சரித்திரத்தோடு மாறுபடாமை

சிவகாமியின் சபதத்திற்கு முகவுரை எழுதியிருக்கும் சரித்திரப் பேரறிஞரும் பேராசிரியருமாகிய கே. வி. ரங்கசாமி ஐயங்காரவர்கள் அதில் எழுதுகிருர்; நுட்பமாக இதை ஆராய்ந்து பார்த்தபோது வரலாற்றுப் பிழையோ, இட விவரங்களைப் பற்றிய பிழையோ ஒன்றும் இருப்ப தாகக் காணவில்லை. வரலாற்று இலக்கியத்தைப் போல இதற்கு விளக்கம் எழுதவேண்டி யிருக்குமாயின், இதில் உள்ள ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரம் காட்டலாம்; அவற்றில் சில அருமையாக உணர்வதற்குரியனவாகவும் இருக்கும். ஆசிரியர் இந்தப் புத்தகத்தை எழுதும்போது அக்தக் காலப் பகுதியைப்பற்றிச் சொல்லும் அச்சுப் புத்தகம் ஒவ்வொன்றையும் அழுத்தமாகப் படித்திருப்ப தாகத் தெரிகிறது' என்பது அவர் கருத்து. ஆசிரியர் தாமே புனேந்து அமைத்த பகுதிகள் சரித்திரத்துக்கு மாறுபாடின்றி அமைந்திருப்பதல்ை அந்தப் பேராசிரியர் இப்படிச் சொன்னர். அந்தக் காலத்தில் இல்லாத பண்டங் களேயும் பழக்க வழக்கங்களையும் புகுத்திக் கதை எழுதினுல் அது சரித்திரத்துக்கு மாருக, கால வழு என்னும் குற்றத்தை யுடையதாகிவிடும். மகேந்திர வர்ம பல்லவருக்கு ரோஜாமாலே போட்டார்கள் என்றும், மதில்மேல் கின்ற வீரர்கள் பகைவர்களின்மேல் மிளகாய்ப் பொடியைத் து.ாவினர்கள் என்றும் எழுதினல் அது வரலாற்றுக்கு மாறுபட்ட வழு. ரோஜாவும் மிளகாயும் வராத காலம் அது.

சரித்திர நாவல்கள்

ஆங்கிலத்தில் சரித்திர நாவல்கள் பல இருக்கின்றன. ஸ்காட் எழுதிய காவல்கள் பலருக்கும் தெரிந்தவை.

1.TProf., K.Tv. Rangaswamy Iyengar: Introduction to Sivakamiyin Sabatham, p. vi. - -