பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தமிழ் நாவல்

களும், அசாதாரணமான சம்பவங்களும் இருக்கும். ஆனாலும் நாம் அவற்றினூடே கலந்து உறவாடுவோம். சரித்திர நாவல்களின் ஆசிரியராகிய ஸர் வால்ட்டர் ஸ்காட் ஓரிடத்தில், 'அற்புதங்களையும் இயல்பையம் இணைப்பது சரித்திர நாவல்'[1] என்கிறார். 'அசாதாரணம் என்பது வேண்டுமேயன்றிப் பாத்திரங்களில் இருக்ககூடாது'[2] என்பது தாமஸ் ஹார்டியின் கருத்து. கோட்டையில் ஏறுதல், கள்ள வழி வழியாகத் தப்பி ஓடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நாள்தோறும் நிகழ்வன - அல்ல; இவை அசாதாரணம். ஆனால் இவற்றைச் செய்யும் பாத்திரங்கள் நம்மைப் போன்ற மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்களுக்குக் காரணமான பண்புகள் எல்லாக் காலத்துக்கும் பொதுவானவை. அதனால் எந்தக் காலத்தில் அந்த நாவலை வாசித்தாலும், சுவையுடையதாக இருக்கும்.

சுவைக்குக் காரணம்

ல்கியின் சரித்திர நாவல்களை மக்கள் விரும்பிப் படிப்பதற்கு முக்கியமான காரணம் அவை சுவையுடையனவாக இருந்தமை ஒன்று. அதனோடு, நாட்டன்பும் ஒரு காரணம். நம் தமிழ்நாட்டு வரலாற்றில் வரும் பேரரசர்களின் கதை என்ற பற்று மக்கள் மனத்தில் உண்டாயிற்று. அவர்களை - நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் கலைப்படைப்புக்கள் - மாமல்லபுரத்திலும் காஞ்சியிலும் தஞ்சையிலும் பிற இடங்களிலும் இன்னும் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக நிலவுகின்றன. இந்த நாவல்களில் அவற்றைப் பற்றிய சுவையான நிகழ்ச்சிகளும் வருவதனால் தமிழ் மக்களுக்கு இவற்றின்பால் மிக்க ஆர்வம் ஏற்பட்டது.


  1. 1. Sir Walter Scott: Introduction to the Fortune of Nigel (1831).
  2. 2. Thomas Hardy: Notebook Entry as quoted in Novelists OIN the Navel by Miriam Allot, p, 58.