பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கல்கியின் நாவல்கள்

129


படிக்கும்போது சிறிதே அலுப்புத் தட்டுகிறது. உண்மையைச் சொல்லப்போனால் அலையோசையையும் ஒரு விதத்தில் சரித்திர நாவலென்றே சொல்ல வேண்டும். நம் காலத்தில் நிகழ்ந்த சுதந்தரப் போர் முதலியவற்றை நிலைக்களமாக வைத்துப் பின்னிய கதை இது. ஆகையால் இதில் புதுமை இருக்க வேண்டும். தேசிய உணர்ச்சியினால் விளைந்த பல செயல்களைக் கண்ட நமக்கு, இந்த நாவலில் உலவும் துடிதுடிப்புள்ள சோஷலிஸ்டுகளாகிய சூரியாவும் தாரிணியும் உள்ளத்தில் நன்றாகப் பதிய வேண்டும். இத்தனையும் உண்மைதான்.

ஆனால் மனித மனத்தின் இயல்பு விசித்திரமானது. கண் முன்னால் நிகழ்ந்த நிகழ்ச்சியின் பெருமை, அதனோடு பழகிப்போன நமக்குத் தெரிவதில்லை. அப்போது இருந்த புதுமை வியப்பு இப்போது மறைந்து மதிப்பு மட்டும் நிற்கிறது. ஆதலால் அவற்றைப் படிக்கும்போது நமக்குப் பழைய சரித்திரத்தைப் படிப்பது போன்ற ஊக்கம் உண்டாவதில்லை ஆனால் வருங்காலத் தலைமுறைகளின் மனோபாவம் இப்படி இராது. அவர்களுக்குச் சத்தியாக்கிரகப் போராட்டம் பழைய வரலாறு ஆகிவிடும். புரட்சி வீரரின் செயல்கள் மகாபாரத யுத்தத்தைப் போன்ற வியப்பை ஊட்டும். மகாத்மா காந்தியடிகளைப் பற்றிய செய்திகள்யாவும் போற்றிப் படிக்கும் அருமைப் பாட்டை உடையனவாக இருக்கும். அப்போது இது சரித்திர நாவலே ஆகிவிடும்.

ஆசிரியரின் நம்பிக்கை

ல்கியவர்கள் இந்த நாவலின் முகவுரையிலே ஒன்று எழுதுகிறார். ‘முதலில் இந்தக் கதை ‘கல்கி’ப் பத்திரிகையில் தொடர்ந்து வெளியாகி வந்தது; பத்திரிகையில் கதை முடிந்த பிறகு இதைப் புத்தக வடிவில் கொண்டுவருவது