பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கல்கியின் நாவல்கள்

135

உண்டாக்குகிறது. தாரீணியிடம் சீதாவுக்குக் கோபமும் வெறுப்பும் ஏற்படுகின்றன. சீதா ஒரு சமயம் ஓடத்திலிருந்து தண்ணீரில் விழுந்து தத்தளித்தபோது ராகவன் ஒன்றும் செய்யாமல் இருக்க, தாரிணி தண்ணீரில் குதித்து அவளைக் காப்பாற்றுகிறாள். அது முதல் சீதாவுக்கு அவளிடம் அன்பு உண்டாகிறது. அவளைக் காணாதபொழுதெல்லாம் சீதாவுக்கு அவளிடத்தில் அன்பு வளர்கிறது; கண்டபொழுதோ கோபம் வருகிறது. ராகவனும் அவளும் ஒன்றாக இருந்து விட்டாலோ அவளை அறியாமலே பொறாமைத் தீப் பொங்குகிறது (ப. 333).

இரகசியங்கள்

தையில் எத்தனையோ இரகசியங்கள் வருகின்றன. ரஜனீபூர்ப் பைத்தியக்காரி ரஸியா பேகம் கதையின் ஆரம்ப முதல் கடைசி வரையில் இடையிடையே வந்து தன் கத்தியைக் காட்டிப் பயமுறுத்துகிறாள். அவள் யார் என்று தெரியவில்லை, தாரிணியின் பிறப்பு மர்மமாகவே இருக்கிறது. ரஜனீபூர் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தாரிணியை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார்கள். சீதாவைத் தாரிணியென்று எண்ணிக் கொண்டு போகிறார்கள். அப்படியே கல்கத்தாவில் போலீஸ்காரர்கள் புரட்சிக் கூட்டத்தைச் சேர்ந்த தாரிணி யென்று சீதாவைக் கைது செய்து சிறை செய்கிறார்கள். இருவருக்கும் தோற்றத்தில் ஒற்றுமை இருப்பதற்குக் காரணம் என்ன? சீதாவின் தந்தை எங்கே போனார்? சீதாவுக்கு உதவி செய்ய முன்வரும் மெளல்வி சாகிப் டார்? இந்தப் புதிர்கள் கதையில் ஆவலைத் தூண்டும் முடிச்சுகளாக உதவுகின்றன. கடைசியில், எல்லாம் அவ்வப்போது அவிழ்கின்றன. சீதாவும் தாரிணியும்