பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. கல்கியின் நாவல்கள்

141

கொண்டே இருந்தது. தலைக்குமேல் ஓடிய வெள்ளத்தின் பாரமும், நெற்றியில் மோதிய அலையின் வேகமும். காதில் தாக்கிய அலை ஓசை இரைச்சலும் முடிவில்லாமல், இடை வெளியில்லாமல் நீடித்துக்கொண்டே இருந்தன’ (ப. 739).

இந்த வருணனையைப் பார்க்கும்போது கல்கியே தண்ணீரில் முழ்கிவிட்ட அநுபவத்தை அடைந்திருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. இத்தகைய அநுபவம் நாவலாசிரியர்களுக்கு நிகழ்வதுண்டு. ‘நான் கற்பனை செய்த பாத்திரங்கள் என் உருவத்தை எடுத்துக் கொள்கிறார்கள்; என்னைத் தொடர்கிறார்கள்; அல்லது நான் தான் அவர்களில் இருக்கிறேன். எம்மா போவரிக்கு நஞ்சூட்டுவதைப்பற்றி நான் எழுதும்போது என் வாயில் நஞ்சின் சுவை கடுமையாக இருந்தது. அதற்காக மருந்து கூட உண்டேன்’ என்று ஒர் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.[1]

அலை ஓசைகள்

ந்த நாவலுக்கு ‘அலையோசை’ என்று ஏன் பெயர் வைத்தார்?

வருகிற துன்பத்துக்கு அறிகுறியாக அலையோசை கேட்கிறது. இதை முதலில் சீதாவின் தாய் ராஜம்மாள் கேட்டு அஞ்சுகிறாள். பிறகு சீதா பலமுறை கேட்கிறாள். ராஜம்மாள், சுரத்தோடு படுத்திருந்தபோது நோயின் வேகத்தால் பல வகையான பிரமைகள் உண்டாகிக் காணாத காட்சிகளையெல்லாம் கண்டாள். ஒரு பயங்கர மான காட்சி: அவளும் சீதாவும் சமுத்திரக்கரையில் நிற்கிறார்கள். சீதா சமுத்திரத்தில் இறங்கிப்போகிறாள். “போகாதேடி, போகாதேடி” என்று ராஜம்மாள் கத்துகிறாள். ‘ஓ’ என்ற அலையோசையினால் அவள் குரல் சீதாவின் காதில் விழவில்லை. மேலும் சமுத்திரத்தில்


  1. Novelists on the Novel, p. 155.