பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தமிழ் நாவல்

வர்களும் கின்னரர்களும் நின்று அவள் மீது மணம் மிகுந்த நறுமலர்களைத் தூவினார்கள். தேவலோகத்து இசைக் கருவிகளை இசைத்துக்கொண்டு அமர கன்னியர் இன்ப கீதங்களைப் பாடினார்கள். அந்தக் கீதங்களுக்கு இணங்க, ஆனந்த நடனம் ஆடிக்கொண்டே சீதா அவ்வீதியில் நடந்தாள்' (ப. 142).

வேறு ஒரு வகையில் இந்தச் சிதாவின் மனநிலையை வருணிப்பதையும் கேளுங்கள்:

'அவளுடைய மனக்கண் முன்னால் உலகமே ஓர் ஆனந்த நந்தவனமாகத் தோன்றியது. அந்த நந்தவனத்தி லிருந்து மரங்களும் செடிகளும் பல வர்ணப் புஷ்பங்களுடன் குலுங்கின. அந்த நந்தவனத்தில் குயில்கள் பாடின; மயில்கள் ஆடின; மான்கள் துள்ளி ஓடின; கிளிகள் மழலை பேசின; புறாக்கள் கொஞ்சி முத்தம் இட்டன' சந்தன மரங்களின் சுகந்தத்துடன் மந்தமாருதம் வீசியது; (ப. 151).

இன்னும் வேறு வேறு வகையில் ஆனந்த உணர்வை வருணிக்க வல்லவர் ஆசிரியர்.

சீதா வெள்ளத்தில் மூழ்குகிறாள். முன்பு ஒரு முறை மூழ்காமல் தாரிணியால் தப்புகிறாள். இப்போது செனாப் நதியில் மூழ்குகிறாள். அந்த அநுபவத்தை வருணிக்கிறார் ஆசிரியர்:

'தலைக்கு மேலே வெள்ளம் ஓடிக்கொண்டே, ஓடிக் கொண்டே, ஓடிக்கொண்டே இருந்தது. நெற்றியின் மேலே அலை மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே இருந்தது. காதில் ஹோ என்று இரைந்த அலை ஓசை, மற்ற எல்லா ஓசைகளையும் அமுக்கிக்கொண்டு மேலெழுந்த பேரலையின் பேரோசை கேட்டுக்கொண்டே, கேட்டுக்கொண்டே, கேட்டுக்