பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தமிழ் நாவல்

இருக்கிற வரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்' [1] என்று எழுதுகிறார். இந்தக் கருத்தை வெளியிடுபவள் கதாநாயகியாகிய ஞானாம்பாள். அவள் மூலமாக வேதநாயகம் பிள்ளையே பேசுகிறார். ஆகவே என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்கிறார்: தேச பாஷைகளில் தகுந்த வசன காவியங்கள் இருக்குமானால் இவ்வளவு நிர்ப்பாக்கியமான ஸ்திதியில் இருப்பார்களா? ஆதலால் இங்கிலீஷ், பிரான்சு முதலிய ராஜ பாஷைகளைப் படிக்கிறவர்கள், தேச பாஷைகளையும் தீர்க்கமாக உணர்ந்து இந்தத் தேசத்தைச் சூழ்ந்திருக்கிற அறியாமை யென்னும் அந்தகாரம் நீங்கும்படி வசன காவியங்கள் என்னும் ஞான தீபங்களை ஏற்றுவார்களென்று நம்புகிறோம்'[2] என்கிறார்.

இப்படி ஏற்றிய தீபந்தான் பிரதாப முதலியார் சரித்திரம். இதைப்பற்றி விரிவாகப் பின்பு பேசலாமென்று எண்ணியிருக்கிறேன்.

பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்தபோது அது. தமிழில் புது விதமாக அமைந்திருந்ததால் அதைத் தமிழ் மக்கள் பெரிதும் பாராட்டினார்கள். ஆங்கிலம் அறிந்தவர்கள், 'தமிழுக்குச் செய்யும் தொண்டு இது' என்றார்கள். தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் அதன் புதுமையிலே ஆழ்ந்தார்கள், இதனால் ஊக்கம் பெற்ற வேதநாயகம் பிள்ளை சுகுணசுந்தரி என்ற பெயரோடு. மற்றொரு நாவலை எழுதினார். அது பிரதாப முதலியார் சரித்திரத்தைப்போல விரிந்ததன்று; கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அளவை யுடையது. அதன் முன்னுரையில் அதைப்பற்றி அவர் எழுதுவது வருமாறு; 'என் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்துக்குக் கிடைத்த சுமுகமான


  1. பிரதாப முதலியார் சரித்திரம், ப. 212.
  2. பிரதாப முதலியார் சரித்திரம், ப, 213.-