பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தமிழ் நாவல்

யையும் கற்பின் உயர்வையும் காட்டுவதற்காக அங்கங்கே நீதி உபதேசங்களோடு அமைந்தவை பல.

இந்த நாவல்களில் நீதியுபதேசம் அங்கங்கே தலை காட்டும், வடசொற்களும் தொடர்களும் மிகுதியாகப் பயின்றுவரும். தமிழ்க் காவியங்களில் வரும் வருணனைகளும். உவமைகளும் அடுத்தடுத்துக் காணப்படும். இடையிடையே பழமொழிகளைச் சமயம் வரும்போதெல்லாம் இணைத் திருப்பார்கள். கதையின் கட்டுக்கோப்பில் இயல்பான காரண காரியத் தொடர்ச்சி, பாத்திரங்களின் கச்சிதமான வடிவம், கதையில் வரும் சம்பவங்களினிடையே உள்ள தொடர்பு வலிமை, கதையை முடித்த பிறகு உண்டாகும் நிறைவு ஆகியவை மிக மிகக் குறைவு. நல்லவர்களை உயர்ந்த பதவியில் வைத்துக் கெட்டவர்களை யெல்லாம் ஒழித்துக் கட்டித் தண்டனை கொடுத்திருப்பார்கள் ஆசிரியர்கள். இந்தக் கூட்டத்தின் நடுவே கமலாம்பாள் சரித்திரம் தனிப் பண்புடையதாக, அழகிய குணச்சித்திர மாளிகையாக, படித்தவர்களின் நெஞ்சாழத்தில் இன்பத்தையும் நிறைவை 'யும் தருவதாக அமைந்திருக்கிறது.


பத்மாவதி சரித்திரம்

அ. மாதவய்யா எழுதிய பத்மாவதி சரித்திரம் அவருடைய 26, 27-ஆம் பிராயத்தில் எழுதப்பெற்றதென்று தெரியவருகிறது.[1] அதாவது 1898-ஆம் ஆண்டு வாக்கில்

அது தோன்றியது. முதலில் முதல் பாகம் வெளியாயிற்று. அப்பால் 1900-ஆம் ஆண்டில் அதன் இரண்டாம் பாகம் புத்தக வடிவில் வந்தது.[2] அந்த இரண்டு பாகங்களிலும் - ஒரு நிறைவைக் காண்கிறோம். முழுமையை உணர்கிறோம்.


  1. மா. கிருஷ்ணன்: பத்மாவதி சரித்திரம், ஆசிரியர் சரிதை, ப. 7.
  2. தமிழ் நூல் விவர அட்டவணை, ப. 827.