பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தமிழ் நாவல்

உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் பரபரப்பு நாவல்களையே அவர் மொழி பெயர்த்துத் தந்தார். அதனால் அவருடைய உழைப்பு அத்தனையும் நீடித்துப் பயன் தராமல் போய் விட்டது.

ஆனாலும் அவருடைய நாவல்களால் விளைந்த நன்மைகளையும் சொல்லவேண்டும். அவருடைய மொழி பெயர்பபு இயல்பான தமிழ்நடையில் அமைந்திருந்தது என்று சொன்னேன். அது ஒரு சிறப்பு. மற்றொன்று அவருடைய மொழிபெயர்ப்புகளைப் படித்தவர்கள் மேலும் மேலும் நாவல்களைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற்றார்கள். அதனால் ஆரணி குப்புசாமி முதலியார் வேறு பல நாவல்களை மொழிபெயர்த்துத் தள்ளினார்.

அவர் செய்தது போல வேறு சிலரும் ஒன்று இரண்டு மர்மக் கதைகளை மொழிபெயர்த்தார்கள். கன்னியின் முத்தம் அல்லது வெண்கலச் சிலை என்ற நாவல் ஓரளவு. . அக்காலத்தில் புகழை அடைந்தது.

அடுத்தபடியாக இந்த மர்மக் கதைகளை வேறு ஒரு வகையில் எழுதத் தொடங்கித் தமிழ் நாட்டில் பெயரெடுக்க முன்வந்தார் வடுவூர் துரைசாமி ஐயங்கார். அவர் மேற் கொண்ட முறையே வேறு. ஆங்கில நாவல்களைத் தழுவித் தமிழ் நாட்டு நிலைக்களத்தைப் புகுத்தித் தமிழ்க் கதையாக . எழுதலானார்: மேனகா, திகம்பர சாமியார் அல்லது. கும்பகோணம் வக்கீல் முதலிய ககைகளை அவர் எழுதினார். பல இங்கிலீஷ் நாவல்களிற் கண்டவற்றைப் பிணைத்துத் துப்பறியும் சாமார்த்தியத்தையும் பொருத்தி வருணனை களுடன் நாவல்களை எழுதினார் அவர். அவருடைய நாவல்கள், தமிழ்நாட்டு வாழ்க்கையோடு பொருத்தி அமைக் கப்பட்டமையால் விரைவில் கதை படிக்கும் உள்ளங்களை ஈர்த்தன. 'அப்புறம் என்ன?' என்று பரபரப்பை யூட்டும் வண்ணம் இருந்தமையால். மக்களுக்கு அந்த நாவல்களில்