பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. பொது வரலாறு
35
 

மடம் முன்பே தமிழில் வெளியாகியிருந்தது.[1] இப்போது பங்கிம் சந்திரருடைய நூல்களை வங்க மொழி தெரிந்தவர்கள் மொழி பெயர்த்துத் தமிழில் வெளியிட்டார்கள். அவற்றை அடுத்துச் சரத்சந்திரருடைய நாவல்கள் தமிழாக்கம் பெற்றன. தொடர்ந்து ரவீந்திரருடைய நாவல்களும் தமிழுருவத்தில் மலர்ந்தன.

பத்திரிகைகளில் தொடர்கதையாகவும் தனியே புத்தகங்களாகவும் இந்த வங்க மொழிபெயர்ப்பு நாவல்கள் வந்தன. ஹிந்தி நாவல்களைவிடக் கங்கைக் கரையிலே விளைந்த இந்த நாவல்கள் தமிழ் நாட்டாரின் சிந்தைக்கு இன்பமும் ஒளியும் தந்தன. வெறும் பரபரப்பான ஆங்கில நாவல்களைப் படித்த காலம் போய்விட்டது. நல்ல நாவல்கள் இப்படியிருக்கும் என்று அறிந்து சுவைக்கும் பழக்கம் தமிழ் மக்களுக்கு உண்டாயிற்று. ஹிந்தி நாவல்களும் வங்க நாவல்களும் இலக்கியப் பண்புடைய நாவல்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தன.


இலக்கியப் பண்பு

னிதப் பண்புகளையும், மனித மனத்தின் ஆழ்ந்த இயல்புகளையும், உண்மைக் காதலையும், நுட்பமான உணர்ச்சிகளையும், அவைகள் காட்டின. நம் நாகரிகச் சிறப்பையும், நம் நாட்டு மண்ணின் மணத்தையும் விளக்கின. கதைகளில் வரும் பாத்திரங்கள் உயிர்த்துடிப்பு உடையனவாக இருந்தன. நாவலைப் படித்த பிறகு ஒரு காவியத்தைப் படித்த பின்பு உண்டாகும் நிறைவு தோன்றியது. நாவல்களில் வளைய வரும் பாத்திரங்கள் நம்முடைய


  1. திருச்சிற்றம்பலம்பிள்ளை என்பவர் ஆனந்த மடத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்தார். மகேசகுமார் சர்மா வங்க மொழியிலிருந்தே மொழிபெயர்த்து வெளியிட்டார்.