பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

61

 கெளசலை முதலான யாவரும் அழுது புலம்பிக் கொண்டிருந்தனர், பொல்லாத கைகேசியால் இந்த அவல நிலை உண்டானதைப் பிரதாப முதலியார் கண்டார். அவர் உள்ளம் பொருமியது. உடனே நாடகசாலையில் புகுந்து" கைகேசியைச் சிலம்பக் கழியால் கை சலிக்க அடித்தார். இராமரைக் காட்டுக்குப் போகாதே என்று சொன்னர். "தந்தை சொல்லைக் காப்பாற்ற நான் காட்டுக்குப் போவது அவசியம்' என்று இராமர் சொல்ல, "நீர் போனால் காலை ஒடித்து விடுவோம்' என்று மிரட்டி ஊருக்குப் போகச் சொல்லி, வசிட்டர் முதலியவர்களைக் கொண்டு இராமருக்கு முடி சூட்டினராம். இதைச் சொல்லிவிட்டு, *இந்தப் பிரகாரம் இராமாயணம் சப்த காண்டத்தை ஒன்றரைக் காண்டத்துக்குள் அடக்கி, இராமரும் அவருடைய தம்பியும் சீதையும் வனத்துக்குப் போகாமலும்,. தசரதர் இறவாமலும், இராவணன் சீதையைச் சிறை எடுத்தான் என்னும் அபவாதம் இல்லாமலும், இராவணாதிகளை இராமர் கொலை செய்தார் என்கிற பழிச் சொல் இல்லாமலும், சிறு பிள்ளையாகிய பரதன் ராஜ்ய பாரம்: தாங்கி வருந்தாமலும் செய்து, பிரதாப முதலி என்னும் என் பேரையும் நிலை நிறுத்தினேன்' என்று முத்தாய்ப்பு வைக்கிறர் கதாநாயகர். நீதிகளைச் சொல்லுவதற்காகவே சக்தர்ப்பங்களை உண்டுபண்ணி நுழைத்த ஆசிரியர் இந்தக் கதைகளுக்கும் வாய்ப்பை இடையிலே உண்டாக்கிப் பல கதைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல வைக்கிறார். ஒரு நீதியைச் சொல்லி அதை விளக்கப் பெரிய கதையைச் சொல்லும்படியும் செய்கிறர், இந்தக் கதைகள் மூலக் கதையின் கட்டுக்கோப்போடு ஒட்டாமல் நிற்கின்றன.


1.ப.11.