பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழ் நாவல்

மர்மமும் வெளிப்பாடும்

கதைப் பின்னலுக்கு (Plot) மர்மமாக இருக்கும் எதுவும் சுவையை மிகுவிக்கும். அந்த இரகசியத்தைக் கதையில் பக்குவமாக அமைத்து, இடையில் வெளிப்படாமல் கொண்டு செலுத்தித் தக்க சமயத்தில் அதை விடுவிக்க வேண்டும். கற்கண்டை மென்று சுவைப்பது: போல இந்த மறை நீட்சி உதவும் மர்மத்தைப் புகுத்தி விரைவில் அது வெளியாகச் செய்தால் சுவை நீடிக்காது. பிரதாப முதலியார் சரித்திரத்தில் சில மர்மங்கள் அல்லது மறைகள் வருகின்றன. ஆனால் உடனே மறை வெளிப்பட்டு விடுகிறது. ஐந்தாவது அத்தியாயத்தில் கனகசடையின் பிறப்பு ஒரு மர்மம் என்ற செய்தி வெளியாகிறது. ஆனால் அடுத்த அத்தியாயத்திலேயே அந்த அநாதைப் பிள்ளைக்கு அன்னையும் பிதாவுமான தேவராஜ பிள்ளையும் அவர் மனைவியும் வந்து மர்மத்தைத் தெளிவித்து விடுகிறார்கள். இப்படியே ஞானாம்பாளுக்குத் துணையாக வரும் ஆண்டிச்சியம்மாள் தன் தகப்பனும் குழந்தையும் போன இடம் தெரியாமல் அல்லலுறுகிறாள்; அவளுடைய கணவன் போர்க்களத்திற்குப் போய் இறந்து போனதாகச் செய்தி வந்ததைச் சொல்கிறாள். ஆனால் அடுத்த அத்தியாயத்திலேயே அவள் தன் கணவனைக் காணுகிறாள்; அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டம் சம்பவித்து அவளுடைய தந்தையும் மகனும் வந்து விடுகிறார்கள். அந்த அத்தியாயத்தின் பெயரே ஆண்டிச்சியம்மாளுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டம் சம்பவித்தல்’[1] என்பது.

ஒரே வகை நிகழ்ச்சிகள்

பொதுவாகவே, மனிதன் நுகர் பொருள்களில் பல வகை இருந்தால் சுவை மிகுதியாகும். இலக்கியத்தில்