பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழ் நாவல்


அறிந்து புத்திர சோகம் உண்டாகிறது. 'முன்னமே உலக இன்பத்தில் அதிருப்தியும், மனிதர் நடத்தையில் அருவருப்பும் உள்ளவர் அவர் குழந்தை போனபிறகு எல்லா விஷயத்திலும் அருவருப்புப் பலமாக ஏற்பட்டது.1' தம்பியின் மறைவும், பொருளை இழந்ததும் அவருடைய துறவு மனப்பான்மைக்கு வலிமையை உண்டாக்கின. இறுதியாக உலக வாழ்க்கையைத் துறக்கும் எண்ணம் உச்ச நிலையை அடைவதற்குக் காரணமாகக் கமலாம்பாளைப் பற்றிய அபவாதச் செய்தி வந்து சேர்கிறது. தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறார்.2 அப்போதுதான் சுவாமிகள் தோன்றி உலக வாழ்க்கையில் அவருக்கு இருந்த வெறுப்பு அவ்வளவையும், பற்றற்ற நடுநிலையில் நின்று விருப்பு வெறுப்புக்கு அப்பால் அமைதிபெறும் உண்மை உள்ளத் துறவுநிலைக்கு உதவி செய்யும் பண்பாக மாற்றி விடுகிறார், அதுமுதல் அவர் அன்பு மயமாக மாறுகிறார், ஆனந்தம் மாறாத சூழலில் சலியாது நிற்கிறார்.

ஆசிரியரின் அநுபவம்

இந்த நாவலின் ஆசிரியர் ராஜம் ஐயர் உலகியலில் பற்றின்றி வாழ்ந்தவர். சாந்தானந்த சுவாமிகள் என்ற பெரியாரை அடுத்து உபதேசம் பெற்றவர். அவருடைய அருளால் ஓரளவு உண்முக நோக்கமும் நிஷ்டையில் இருக்கும் பழக்கமும் ஒருவகை அநுபூதியும் உடையவரானார்.3 இந்த அநுபவத்தையே முத்துசாமி ஐயருடைய அநுபவமாக எழுதியிருக்கிறார். 25-ஆவது அத்தியாயமாகிய விசுவரூப தரிசனம் என்னும் பகுதியும், 30-ஆவது அத்தியாயமாகிய சிதம்பர ரகசியம் என்ற பகுதியும், பிரம்மானந்த சுகம் என்ற 34ஆவது அத்தியாயமும்,

1. ப.115. 2. ப.143

3. ஏ. எஸ். கஸ்தூரிரங்கையர்; ராஜம் அய்யர் சரிதை, ப. 15.