பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 |

ஒரு நல்ல நாவலைப் படிக்கும்போது ஒரு வாழ்க்கை யையே வாழ்ந்துவிட்ட உணர்வு தோன்றக்கூடுமானல் அதுவே பெரிய பாக்கியம். 'இதயநாத’’த்தைப் படிக்கும் போது ரசாநுபவம் நிறைந்த ஒரு நல்ல கச்சேரியைக் கேட்ட மனநிலைமை ஏற்படுகிறது.

இதயநாதம் ஒரு லட்சிய நாவல். வாழ்வில் ஒவ்வொரு துறையிலும் சில விசேஷங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்தவர்கள்தான் அந்த விசேஷங்களைப்பற்றிப் பேசமுடி யும். சங்கீதத்தின் அருமையை அநுபவித்து உணர்ந்திருக் கும் திரு. சிதம்பர சுப்பிரமணியம் இந்த நாவலை ஆக்கித் தந்திருப்பது தமிழுக்கு நல்ல தொண்டு.

இதயநாதம் தெய்வகீதம்பற்றிப் பேசும் ஒரு உயர்ந்த கதை. அதைப் பேசி விளக்கமுடியாது. அதுபவித்து அநுப வித்து நெக்குருகத்தான் முடியும். -

எங்கே மகான்களும் மேதைகளும் வாழ்கிருர்களோ, அவர்கள் அனைவருக்கும் என் வந்தனங்கள்.'