பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

ஆடம்பரமில்லாத நடையில் அலுப்புத்தட்டாத வகை யில் அவசியமான சம்பவங்களை மட்டும் கொண்டதாகக் கதையை ஆசிரியர் நடத்திச் செல்லும் பாணி வியக்கத்தக்க தாக இருக்கிறது. கதை முழுவதும் ஒரே சீரான அமைதி விரவிக்கிடக்கும் அழகு, கதை படிக்கும்போது, தெய்வசந்நி தானத்தில் நிற்கும் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது. அங்கங்கே முத்துக் கோத்தாற்போல் ஆசிரியர் தெளிக்கும் சில கருத் துக் களைப் பார்ப்போம்.

'சங்கீதத்தை ஒரு யோகமாகவும், தபலாகவும், பெரிய வர்கள் கருதி வந்தார்கள். ஆனல் தற்காலத்திலே, பாட கர்கள் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அடைவதுடன் தங்கள் சாதனை பூரணத்துவம் பெற்றுவிட்டதாக நினைத்து விடுகிருர்கள். சங்கீதம் என்பது ஒரு தொழில் முறையாகி விட்டது. மனிதனின் ஆத்ம ஞானத்தை உயரவைப்பதற்குப் பதில் அது கீழிறங்கிவந்து லெளகிக பேரம் பேசுவ தாகிவிட்டது.' х

"மரணம். வாழ்க்கையில் ஒரு நிச்சயமான அம்சமாக இருந்த போதிலும் அது எவ்வளவு தூரம் மனிதனுடைய உள்ளுணர்விலே தைத்து அவனுக்கு வாழ்க்கையின் தத்து வத்தைப் போதிக்கிறது. தருமபுத்திரர் நச்சுப் பொய்கை யில் ஆச்சரியப்பட்டதுபோல், வாழ்க்கையிலே, மனிதன் ஏன் மரணத்தைப்பற்றிய சிந்தனையேயின்றி வாழ்க்கையைச் சதமென்று எண்ணி ஈடுபட்டு நிற்கிருன் என்பது ஆச்சரியப் படவேண்டிய விஷயமாகத்தானிருக்கிறது' -

'உலகத்தில் பார்க்கப்போல்ை, மனித னு ைடய தன்மை அவன் கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்த தாகத்தான் இருக்கிறது. ஏழையின் சொல் மாத்திரம் அம் பலம் ஏறமுடியாமல் இருப்பதில்லை. ஏழையே அம்பலத் துக்கு வரமுடிகிறதில்லையே... - 'மனது பக்குவமடைய மயானம் ஒரு பயிற்சியைக் கொடுக்கிறது. வாழ்க்கையின் உண்மையே மயானத்தில் ஆரம்பமாகிறது.' .: : : r :