பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.69

இந்த இடைக்காலத்தில் பாலாம்பாள் அவனிடம் ಹಗ டிய குருபக்தியும் அவளது அன்பைக் கண்ட நீலாவி

உள்ளப் புகைச்சலும் ரசமான சம்பவங்கள்.

வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதகைத் தொடங்கி, கலையின் மகோன்னத சிகரத்தை எட்டிப்பிடித்து கிருஷ்ண் பாகவதர் என்ருல் சங்கீதத்தின் பாதுகாவலர் என்னும் நிலையை அடைந்த அவனுக்குக் கடைசியாக ஒரு பெரும் வீழ்ச்சி. அவனுடைய சாரீரம் அவனைத் திடீரென்று கை விட்டு விடுகிறது. வாழ்க்கையில் எத்தனையோ அடிகளைத் தாங்கிக்கொண்ட அவளுல் இந்த அடியைத் தாங்க முடிய வில்லை. - - .

இந்த வேதனையிலிருந்து அவனை மீட்டு அவனுக்கு மன அமைதி கொடுக்கிருர் கந்தசாமிப் பாகவதர். கதையில் கிட்டுவுக்கு அவ்வப்போது நல்லுரை கூறி உதவும் இந்தப் பாத்திரம் பக்குவப்பட்ட மனநிலையுள்ள ஒரு அற்புதமான பாத்திரம். - - 'உன்னுடைய அருமையான குரலே இழந்து நீ வேதனைப் படுகிருய். வாஸ்தவம்தான். அதல்ை என்ன குடி முழுகிப் போய்விட்டது? உன் காதுகள் கேட்ட நாத வெள்ளத்தில் இதுவரை ஈடுபட்டிருந்தாய். இனி, செவிக்கு எட்டாத இனிய நாதத்தில் ஈடுபடுவதற்குத்தான் உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நீ நாதத்தின் எல்லையைக் கடந்துவிட்டாய். அடுத்தபடியில் இருப்பது மெளனம்.' என்று அவர் கூறியதும், . . . . . . . . . " ' ... :

இதுவரையில் பகவானைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டு வந்தேன். இனி என் இதயத்தால் அவரைக் கூப்பிடுவேன். என்று பக்குவப்பட்ட மனத்துடன் கிட்டு பதிலளிப்பதும். கதையின் முடிவில் வரும் சுவையான சம்பாஷனைகள் மட்டு மல்ல; கதையின் இதயநாதமாக ஒலிக்கும் வார்த்தைகள்.

நா-11