பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置萄曾

போக்குள்ள அவளுடன் நடத்தும் குடும்ப வாழ்க்கை இடர் மிகுந்ததாக அமைகிறது. ஆயினும் கிட்டு தன் தீர்மானத் லிருந்து கடைசிவரை பிறழவேயில்லை.

பணவிவகாரம் காரணமாக வீட்டில் சண்டை ஏற்படா மல் இல்லை. ஒரு நாள் வீட்டில் ஏற்பட்ட சண்டையில் மனம் வெறுத்துப்போய் வீட்டைவிட்டே வெளியேறிவிட எண்ணுகிருன் அவன். அவனுடைய நண்பர் கந்தசாமி பாகவதர் கூறும் நல்லுரைகள் அவனைப் பிடித்து நிறுத்து கின்றன. வீடு திரும்பும் கிட்டுவை அமைதியுடன் நீலா வரவேற்கிருள். 'விதி செய்யும் கொடுமை போதும். நீயும் நானும் ஒருவருக்கொருவர் கொடுமை செய்துகொள்ள வேண்டாம் என்று கூறி கிட்டு அந்தச் சச்சரவுக்கு ஒரு முத்தாய்ப்பு வைக்கிருன்.

தவத்தின் மகிமையும் ஒளியும் அதற்கேற்படும் இடைஞ் சல்களிளுல்தான் வலுப்பெற்று மெருகேறுகின்றன. அதைப் போலவே, கிருஷ்ண பாகவதர் என்று எல்லோரும் கொண் டாடும் கிட்டுவின் வாழ்விலும் அவ்வப்போது இடைஞ் சல்கள் வெவ்வேறு உருவில் பிறந்து அவன் தன் தவமேன் மையை விளக்குகின்றன. அற்புதமான சாரீரமும், கிருஷ்ண பாகவதரின் வழியில் அந்தரங்க சுத்தியுடன் கூடிய ஈடுபாடும் கொண்ட தாளி ஒருத்திக்கு சிrை சொல்லிவைக்கும் நிர்ப் பந்தம் அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. நண்பர் ஒருவர் வற் புறுத்தியபோது, இது தனக்கு ஒத்ததில்லை என்று தயங்கிய அவனே, நாளடைவில் அந்தப் பெண்ணின் குணத்தினுலும் சங்கீதாப்யாசத்தில் அவளுக்கிருந்த உண்மையான பக்தி யிலுைம் கவரப்பட்டு ஊராரின் ஏளனப் பேச்சுக்களைப் புறக்கணிக்கும் மனநிலையை அடைந்து விடுகிருன். ஆயினும் அவனே எதிர்பாராத நிலையில் அவள் உள்ளத்தில் அவனிடம் ஏற்பட்டிருக்கும் பிரேமையை தெரிந்துகொண்டபோது அதிர்ச்சியடைகிருன். அந்த நிமிஷம் முதல் அந்த சிrைக்கு

முற்றுப்புள்ளி வைத்துவிடுகிருன். .