பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 67

போது, அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வித் வானை திருவையாறு சபேசய்யரிடம் சிஷ்யனக அவனைக் கொண்டு சேர்த்துவிடுகிருர் அவர். பத்து வருஷத்தில் குருவே வியந்து பாராட்டும் ஞான ஒளியைப் பெற்றுவிடு கிருன். இந்தப் பத்து வருட காலத்தில் அவனுக்குத் தன் ஊர் நினைவோ தாயின் நினைவோ வந்ததாகத் தெரியவில்லை. சபேசய்யர் காலமானபோதுதான் அவனுக்குத் தன் தாயின் நினைவும் ஊரின் நினைவும் வருகின்றன. அதுவரை தனக் குத் தாயார் உயிருடன் இருப்பதையே வெளியே சொல்லிக் கொள்ளாமல் இருந்தான். அதன்பின், சபேசய்யரின் மனைவியிடம் உண்மையைக் கூறி உத்திர்வு பெற்றுக் கொண்டு ஊருக்குக் கிளம்புகிருன்.

அங்கே பாழ்மனேயும், ஆறு வருடத்துக்கு முன்பே தாய் இறந்துபோய்விட்ட செய்தியும் அவனை அறைந்து திருப்பு கின்றன. வெதும்பிய மனத்துடன் திருவையாறு திரும்பி விடுகிருன்.

அவனுடைய கலைத்திறமை எல்லாராலும் ஒருங்கே பாராட்டப்பெறுகிறது. பேரும் புகழும் அவனைத் தேடி வந்து அடைகின்றன. செல்வம் வரும் வழியை அவளுகவே அடைத்துவிடுவதுதான் வேடிக்கை இதில்.

ஒரு பணக்காரர் வீட்டுக் கல்யாணத்தில் பாட ஒப்புக் கொண்ட அவன், கச்சேரிக்குக் குறிப்பிட்டிருந்த காலத்தில் வராமல் சந்தியா வந்தனத்தில் ஈடுபடவே, தனவந்தர் வெகு கோபமாயும் உதாசீனமாகவும் பேசிவிடுகிருர். அப்போது ஏற்பட்ட மனக் கொந்தளிப்பில் பணத்துக்காகப் பாடும் வழக்கம் இன்ருேடு தொலைந்தது' என்று கூறி சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் செய்வது என்று உறுதியெடுத்துக்கொள் கிருன். இதற்கிடையிலே சபேசய்யரின் மனைவி தருமாம் பாளின் முயற்சியில் அவளுடைய தங்கையின் பெண் நீலா கிட்டுவுக்கு மனேவியாக வந்து வாய்க்கிருள். பணத்தைத் துச்சமாக மதிக்கும் இவனுக்கு நேர் எதிரிடையான மனப்