பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 6

காகக் கூறிவிட்டார் அவர். பாரதப் பண்பில் நம்பிக்கையும் சங்கீதத்தின் தெய்வத்தன்மையில் ஈடுபாடும் கொண்ட ரசிக உள்ளங்களுக்கு இதய நாதம் ஒரு வரப்பிரசாதம்!

சொல்லப்போல்ைஇந்தக்கதையின் ஜீவநாடியே சங்கீதம் தான். ஆகவே வழக்கமாக நாம் படிக்கிற நாவல்களிலிருந்து சற்று விலகிய பாட்டையில்தான் கதை நடை போடுகிறது. அதுவே அதற்கு ஒரு சிறப்பாகவும் அமைந்துவிடுகிறது. சாதாரண மனிதனுடைய எண்ணங்களுக்கும் கலைஞனுெரு வனின் எண்ணங்களுக்கும் வேறுபாடு உண்டு. அதிலும் கலையை ஒரு யோகமாகப் பயிலும் ஒருவனைக் கதாநாயகனுக வைத்து எழுதும்போது, அப்படிப்பட்ட ஒரு யோக அதுப வத்தை உணர்ந்திருந்தாலன்றி, எழுத்தில் வெற்றிபெற்று விட முடியாது. ஆசிரியர் எழுத்தில் இந்த வெற்றியை அடைந்திருக்கிருர் என்று சொல்லும்போதே அவரது கலை உபாசனையை' நாம் வணங்காமல் இருக்க முடியவில்லை.

கதை:

'ஒழுங்குமுறையில்லாது ஊதாரியாக வாழ்ந்து அற் பாயுசிலேயே கண்ணை மூடிவிட்ட வைத்தியின் பிள்ளை கிட்டு விற்குக் கேட்போர் அதிசயிக்கும் சங்கீத ஞானம் பிறவியி லேயே வாய்த்திருந்தது. அப்பா சங்கீதம் கற்றுக் கொண்டு சிரிப்பாய்ச் சிரித்தது போதும். இவனுக்குச் சங்கீதம் வேண் டாம்' என்று நினைக்கும் அவனுடைய விதவைத்தாய், தன் தமையனுடன் அவனே அனுப்பிவைத்து சாஸ்திரோக்தமான கல்வி பயிற்றுவிக்க எண்ணுகிருள். கிட்டுவுக்கு மாமாவையும் பிடிக்கவில்லை. இந்த ஏற்பாடும் பிடிக்கவில்லை. ஆகவே தன்னையே நம்பியிருக்கும் தாய்க்குக்கூடச் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிருன் அவன்.

வழியில் ஒரு கல்யாணக் கோஷ்டியைச் சேர்ந்த கிழவர் ஒருவரின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அவருடன் கிளம் பும் அதிருஷ்டம் அவனுக்குக் கிடைக்கிறது. பையனிடம் இருக்கும் சங்கீத ஞானத்தைக் கிழவர் தெரிந்துகொண்ட