பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர சுப்பிரமணியனின்

இதய நாதம்

ஜடாதரன்

ஒரு நாத யோகியைக் கதாநாயகனக வைத்து எழுத வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்துவந்தது. அதன் விளைவே இந்தப் புத்தகம்' என்று தன்னுடைய முன்னுரையில் கூறுகிருர் ஆசிரியர், ந. சிதம்பர சுப்ரமணி யம் அவர்கள். நாதோபாசனையில் தன் வாழ்வை அர்ப் பணித்துக்கொண்டுவிட்ட ஒரு மகானுடன் பழகிய அனுபவ நிறைவு இந்த நாவலேப் படித்து முடித்ததும் நமக்கு ஏற்படு கிறது.

கதையில் கந்தசாமி பாகவதர் என்பவரின் வாயிலாகக் குறிப்பிடும் கருத்தின்படி, ஆசிரியர் தன் கலையின் பயன அடைந்துவிட்டார் என்று சொல்லவேண்டும்.

"எங்கேயாவது ஒரு மூலையில்அழுக்கு வேஷ்டியைகட்டிக் கொண்டு ஒரு பரம ரசிகன் உட்கார்ந்திருப்பான். நீ பாடும் பாட்டைக் கேட்டுவிட்டு, ஆத்மானந்தத்தினல் உன்னை மனப்பூர்வமாக ஆசீர்வதிப்பான். அதுதான்நீ கற்ற வித்தை யின் பலன்' என்று கதாநாயகனிடம் கந்தசாமி பாகவதர் கூறுகிருர். உண்மையான கலேயின் பயனை எவ்வளவு அழ